ETV Bharat / sports

வான்கடே மைதானத்தில் மாயாஜாலம் செய்த தோனி.. புதிய சாதனைக்கு கேக் வெட்டி கொண்டாட்டம்! - MS Dhoni hat trick sixes - MS DHONI HAT TRICK SIXES

MS Dhoni hat trick sixes: மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் எம்.எஸ்.தோனி கடைசி ஓவரில் தொடர்ந்து 3 சிக்ஸர்கள் அடித்து வாணவேடிக்கை நிகழ்த்திய வீடியோவை அவரது ரசிகர்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 12:17 PM IST

மும்பை: வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபில் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 69 ரன்களும், ஷிவம் துபே 66 ரன்களும், கடைசி ஓவரில் களமிறங்கிய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர் உட்பட 20 ரன்களும் குவித்து அசத்தினர்.

பின்னர், சொந்த மண்ணில் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி சார்பில் முன்னாள் கேப்டனுமான ரோஹித் சர்மா 63 பந்துகளுக்கு 105 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் அடுத்து வந்த வீரர்கள் யாரும் பெரிதாக விளையாடமால் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பியதால் மும்பை அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்து சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது.

சம பலம் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியதால் நேற்றைய போட்டி 'எல் கிளாசிகோ' போட்டியாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் ஐபிஎல் தொடர்களில் இதுவரை தலா ஐந்து முறை கோப்பை வென்ற அணிகள் என்பதால் இந்த அணிகள் மோதும் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். அவர்களுக்கு விருந்து படைத்த போட்டியாக நேற்றையை போட்டி இருந்தது.

ரோஹித் சர்மா நீண்ட நாட்களுக்குப் பிறகு சதம் விளாசியது, எம்.எஸ்.தோனி தனது ஹெலிகாப்டர் ஷாட்டை மீண்டும் ரசிகர்கள் முன்பு காட்டியதோடு ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசியது என மைதானத்திற்கு வந்திருந்த இரு அணி ரசிகர்களும் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினர்.

அதிலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு தோனியின் அதிரடி ஆட்டத்தைக் கண்ட ரசிகர்கள் அந்த வீடியோ தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து 'சிங்கத்தின் ஆட்டைத்தை பாருங்கள்', 'தல தோனியின் ருத்ர தாண்டவம்' உள்ளிட்ட கருத்துக்களை #MSDhoni ஹேஸ்டேக்கை பகிர்ந்து வருகின்றனர்.

இதனிடையே, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 250 போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் விராத் கோலிக்கு பிறகு இரண்டாவது வீரராக எம்.எஸ்.தோனி இடம் பெற்றுள்ளார். இதனை சிஎஸ்கே அணி நிர்வாகம் கேக் வெட்டி கொண்டாட்டத்தை வெளிப்படுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ஐஎஸ்எல் கால்பந்து லீக்: பிளே ஆப், இறுதி போட்டிக்கான அட்டவணை வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.