ஐதராபாத்: போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதன்கிழமை சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார். கால்பந்து விளையாட்டில் தனது அனுபவங்கள், வரலாற்றில் இடம் பிடித்தது உள்ளிட்ட தனது கதைகளை அதில் பதிவிடத் தொடங்கி உள்ளார். இந்நிலையில், அவர் யூடுயூப் சேனல் தொடங்கிய 90 நிமிடத்தில் ஏறத்தாழ 10 லட்சம் பேர் அவரது சேனலை சப்ஸ்கிரைப் செய்து உள்ளனர்.
இதன் மூலம் யூடியூப் சேனல் தொடங்கிய சில மணி நேரத்தில் 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் பெற்ற முதல் நபர் என்ற சாதனையையும் ரொனால்டோ படைத்துள்ளார். தற்போது வரை அவரது யூடியூப் சேனலை 14.4 மில்லியன் பேர் சப்ஸ்கிரைப் செய்து உள்ளனர். இதன் மூலம் சேனல் தொடங்கிய ஒரு நாளுக்குள் அதிக சப்ஸ்கிரைபர்களை பெற்ற முதல் நபர் என்ற புது மைல்கல்லையும் ரொனால்டோ படைத்துள்ளார்.
முன்னதாக தான் யூடியூப் சேனல் தொடங்க உள்ளது குறித்து கிறிஸ்டியானா ரொனால்டோ தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். அந்த பதிவில் "காத்திருந்தது போதும், எனது யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுவிட்டது. அனைவரும் எனது புதிய பயணத்தில் இணைந்து கொள்ளுங்கள்" என்று ரொனால்டோ பதிவிட்டு இருந்தார்.
இதையடுத்து லட்சகணக்கான ஆதரவாளர்கள் அவரது யூடியூப் சேனலை பின் தொடர தொடங்கினர். இதனால் குறிப்பிட்ட நேரத்தில் அதிக சப்ஸ்கிரைபர்களை திரட்டிய நபர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் ரொனால்டோ. 39 வயதான கிறிஸ்டியானா ரொனால்டோ பதிவிட்ட முதல் வீடியோவை வெறும் 13 மணி நேரத்தில் 70 லட்சத்து 95 ஆயிரம் பார்த்துள்ளனர்.
விரைவில் அவர் யூடியூப்பில் அதிக சப்ஸ்கிரைபர்ஸ்களை வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் டைமண்ட் பட்டனை வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வெகுமதியை அடையை அவருக்கும் வெறும் 6 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்கள் மட்டுமே தேவைப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யூடியூப் தவிர்த்து எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களிலும் ரொனால்டோ உள்ளார். இதில் எக்ஸ் தளத்தில் 112.6 மில்லியன், பேஸ்புக்கில் 170 மில்லியன் மற்றும் இன்ஸ்டாகிராமில் 636 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்களை ரொனால்டோ வைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒடிசாவில் இந்திய ஹாக்கி அணி! ரோடு ஷோ கோலாகல கொண்டாட்டம்! - Indian mens hockey team