பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 17வது பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (செப்.3) ஒரே நாளில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி உள்பட 8 பதங்களை வென்று குவித்து வரலாறு படைத்தது. பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியா ஒருநாளில் வென்ற அதிகபட்ச பதக்கங்களின் எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஆடவர் பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர் நிதேஷ் குமார் விளையாடும் போது வர்ணனையாளர் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலியின் பெயரை குறிப்பிட்டு கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. போட்டியின் நடுவே பேசிய வர்ணனையாளர் நிதேஷ் குமாரின் மனம் கவர்ந்த விளையாட்டு வீரர் விராட் கோலி என்றார்.
விராட் கோலி அருமையான கிரிக்கெட் வீரர் என்று குறிபிட்ட வர்ணனையாளர், பெரும்பாலான இந்தியர்கள் விராட் கோலியை தங்களது ஹீரோவாக பார்ப்பதாக கூறினார். மேலும் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்திய விராட் கோலி, பல விளையாட்டு வீரர் வீராங்கனைகளின் முன்மாதிரியாக திகழ்கிறார் என்று வர்ணனையாளர் தெரிவித்தார்.
English commentators during Paralympics badminton gold medal match
— Gaurav (@Melbourne__82) September 2, 2024
" his hero is virat kohli, the wonderful indian cricketer....i think most people in india have virat kohli as sporting hero" pic.twitter.com/OElSW5TsDH
தற்போது இந்த வீடியோவை விராட் கோலியின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். முன்னதாக ஆடவர் பேட்மிண்டன் SL3 பிரிவின் இறுதிப் போட்டியில் விளையாடிய இந்திய வீரர் நிதேஷ் குமார், கிரேட்டன் பிரிட்டனை சேர்ந்த டேனியல் பெத்தல் என்பவரை எதிர்கொண்டார். அந்த ஆட்டத்தில் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் நிதேஷ் குமார் 21-க்கு 14, 18-க்கு 21, 23-க்கு 21 என்ற செட் கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஏறத்தாழ 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் நிதேஷ் குமார் போராடி வெற்றி பெற்றார். இதற்கு முன் ஏறத்தாழ 9 முறை டேனியல் பெத்தலுடன் நேருக்கு நேர் மோதிய நிதேஷ் குமார் அதில், ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. தற்போது அந்த மோமான சாதனையையும் நிதேஷ் குமார் நேற்று தகர்த்து எறிந்து புது மைல்கல் படைத்தார்.
இதையும் படிங்க: ஒரே நாளில் 8 பதக்கம்.. பாராலிம்பிக்ஸ்சில் வரலாறு படைத்த இந்தியா! - paris paralympics 2024