ETV Bharat / sports

தங்கப் பதக்கத்திற்கு பரிசு கல்யாண மோதிரம்! மேடையில் நடந்த க்யூட் புரபோசல்! - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

Paris Olympics 2024 Viral Video: பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் பதக்கம் வென்ற கையோடு தனது இணைக்கு காதல் புரபோஸ் செய்த சீன வீரரின் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Etv Bharat
Huang Yaqiong was proposed to by boyfriend Liu Yuchen (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 3, 2024, 4:37 PM IST

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றில் சீனாவைச் சேர்ந்த ஹுவாங் யா சியோங்கும் (Huang Ya Qiong) செங் சிவையும் (Zheng Siwei) தென் கொரியாவை வீழ்த்தித் தங்கப் பதக்கத்தை வென்றனர்.

தங்கப் பதக்கத்தை வென்ற பின்னர் சீனப் பேட்மிண்டன் அணியைச் சேர்ந்த லியூ யூசென் (Liu Yuchen) தம்மைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டு ஹுவாங்கிடம் புரபோஸ் செய்தார். இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் கத்திஒ கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். இந்த திடீர் புரபோசலை சற்றும் எதிர்பாராத ஹுவாங் திகைத்துப் போனார்.

பின்னர் லியூ யூசென், அவருக்கு மோதிரத்தை அணிவித்தார். இதைக் கண்டு ஹுவாங்கினால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த இயலவில்லை. இந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்த அருகில் இருந்தவர்கள் அதை இணையத்தில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து பேசிய ஹுவாங், "நான் போட்டிக்காக என்னைத் தயார்ப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தினேன். இதனைச் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. இன்று நான் ஒலிம்பிக் வெற்றியாளர். அதோடு யூசென் தம்மைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டிருக்கிறார்" என்று தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஹுவாங் யா, சியோங்கும் செங் சிவை ஜோடி வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல்: நூலிழையில் பதக்கத்தை தவற விட்ட மனு பாக்கர்! - Paris Olympics 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.