ETV Bharat / sports

முதலமைச்சர் கோப்பை 2024; சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற சென்னை மாவட்ட அணி!

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் சென்னை மாவட்டம் 105 தங்கம், 80 வெள்ளி, 69 வெண்கலம் என 254 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி
சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2024, 7:41 AM IST

சென்னை: சென்னை, பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட முதலமைச்சர் கோப்பை - 2024ஆம் ஆண்டுக்கான நிறைவு விழா மற்றும் வெற்றிக் கோப்பை வழங்கும் நிகழ்ச்சி நேற்றுடன் (அக்.24) நிறைவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க : 76 வயதில் தடகளம் போட்டியில் 3 பதக்கம்... வீட்டிற்கே சென்று பாராட்டிய விசிக நிர்வாகிகள்!

இப்போட்டி கடந்த 4ஆம் தேதி தொடங்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் என 5 வகைகளில் போட்டிகள் நடைபெற்றது. மொத்தம் 33 ஆயிரம் பேர் 36 வகையான விளையாட்டு போட்டிகளில், 168 பிரிவுகளில் 11,56,566 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் சென்னை 105 தங்கம், 80 வெள்ளி, 69 வெண்கலம் என 254 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 31 தங்கம், 26 வெள்ளி, 36 வெண்கலம் என 93 பதக்கங்களோடு செங்கல்பட்டு இரண்டாவது இடம் பிடித்தது. 23 தங்கம், 40 வெள்ளி, 39 வெண்கலம் என 102 பதக்கங்களோடு கோயம்புத்தூர் மூன்றாவது இடம் பிடித்தது. பதக்கங்கள் வென்ற அணிக்கான வெற்றிக் கோப்பைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.