ETV Bharat / sports

பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024: தேசியக் கொடியை சுமந்து செல்லும் வாய்ப்பு யாருக்கு தெரியுமா? - Paris Paralympics 2024 - PARIS PARALYMPICS 2024

பாரீஸ் பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் பாக்யஸ்ரீ ஜாதவ் மற்றும் சுமித் அன்டில் ஆகியோர் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Bhagyashree Jadhav and Sumit Antil
File Photo (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 16, 2024, 4:21 PM IST

டெல்லி: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடர் தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரின் தொடக்க நாளில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்வர்கள் குறித்து மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய பாரா குண்டு எறிதல் வீராங்கனை பாக்யஸ்ரீ ஜாதவ் மற்றும் ஈட்டி எறிதல் வீரர் சுமித் அன்டில் ஆகியோர் பாரீஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரின் தொடக்க நாளில் இந்திய தேசியக் கொடியை சுமந்து அணிவகுத்துச் செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு திருவிழாவில் கலந்து கொள்ளும் 84 பேர் கொண்ட இந்தியக் குழுவை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் தேசியக் கொடியை சுமந்து செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த பாராலிம்பிக்கிலும் இல்லாத அளவில் முதல் முறையாக பாரீஸ் பாராலிம்பிக் விளையாட்டு தொடரில் இந்தியாவில் இருந்து அதிகபட்சமாக 84 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். முன்னதாக கடந்த டோக்கியோ பாரலிம்பிக்ஸ் தொடரில் இந்தியாவில் இருந்து 54 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு இருந்தனர்.

டோஒக்கியோ பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா பாராலிம்பிக் அணி மொத்தம் 19 பதக்கங்களை வென்று இருந்தது. இந்த முறை அதைவிட கூடுதலாக பதக்கங்களை வென்று இந்திய பாராலிம்பிக் அணி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடரில் இந்திய அணி ஒரு வெள்ளி உள்பட 6 பதக்கங்களை மட்டுமே கைப்பற்றி 71வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த பாக்யஸ்ரீ ஜாதவ்?:

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பாக்யஸ்ரீ ஜாதவ் சர்வதேச அளவில் பல்வேறு தொடர்களில் கலந்து கொண்டு இந்தியாவுக்காக பதக்கங்களை வென்று குவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு தொடரில் F34 பிரிவில் கலந்து கொண்ட பாக்யஸ்ரீ வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2020 டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு தொடரில் பாக்யஸ்ரீ 7வது இடம் பிடித்தார். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வரும் பாக்யஸ்ரீ ஜாதவ், குறைந்த காலக்கட்டத்திலேயே பல்வேறு தொடர்களில் தொடர்ந்து பதக்கங்களை வென்று குவித்து வருகிறார்.

சுமித் அன்டில் யார்?:

F64 பிரிவில் கலந்து கொண்டு உள்ள சுமித் அன்டில், பாரா ஈட்டி எறிதல் விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ளார். 2020 டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு தொடரில் சுமித் அன்டில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் டோக்கியோ பாராலிம்பிக்கில் சுமித் அன்டில் 68.55 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்தார்.

தொடர்ந்து 2023ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார். அது மட்டுமின்றி 2022 ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் சுமித் அன்டில் 73.29 மீட்டர் உயரத்திற்கு ஈட்டி எறிந்து புது உலக சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமெரிக்கா செஸ் சாம்பியன்ஷிப்: இறங்கு முகத்தில் பிரக்ஞானந்தா! தொடர் தோல்வியால் கடைசி இடம்! - Praggnanandhaa

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.