ETV Bharat / sports

Champions Trophy 2025: "பாகிஸ்தான் செல்ல வாய்ப்பில்லை..." ஐசிசியிடம் பிசிசிஐ முறையீடு எனத் தகவல்! - CHAMPIONS TROPHY 2025

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் பிசிசிஐ தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Representative image (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 10, 2024, 9:44 AM IST

ஐதராபாத்: அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் வைத்து சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை தங்கள் நாட்டில் நடத்த தேவையான அனைத்து பணிகளிலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அதே அளவுக்கு இந்திய அணியை பாகிஸ்தான் மண்ணில் விளையாட வைக்கவும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் பாகிஸ்தான் சென்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு தங்கள் தரப்பில் ஆட்சேபனை இல்லை என முன்னர் பிசிசிஐ தெரிவித்த போதும், இது குறித்து மத்திய அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக கூறப்பட்டது.

அட்டவணையில் பிரச்சினை:

இந்நிலையில், பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணி அங்கு பயணிக்காது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில், பிசிசிஐ தரப்பில் வாய்வழிக் கருத்தாக தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கான அட்டவணை தயாரிக்கப்பட்ட நிலையில், பிசிசிஐ தனது முடிவை தெரிவித்து இருப்பது பிரச்சினயை கிளப்பி உள்ளது.

ஏறத்தாழ 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ளனர். கடைசியாக 2017ஆம் ஆண்டு ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்சில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது.

8 ஆண்டுகள் கழித்து:

அதில் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது. அதன் பின் ஏறத்தாழ 8 ஆண்டுகள் கழித்து மீண்டுன் சாம்பியன்ஸ் கோப்பை திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை பாகிஸ்தானுக்கு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்த உரிமை வழங்கப்பட்டுள்ளது.

எப்படியாவது இந்திய அணியை பாகிஸ்தான் கொண்டு வர அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி முயற்சித்து வருகிறார். 2008ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடியாக கிரிக்கெட் தொடர் நடத்தப்படாத நிலையி, ஐசிசி உள்ளிட்ட பொது அமைப்புகள் நடத்தும் தொடர்களிலேயே இரண்டு அணிகளும் மோதிக் கொள்கின்றன.

பிசிசிஐ முடிவு என்ன?:

ஆரம்பம் முதலே சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த இந்தியா அறிவுறுத்தி வருகிறது. இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இந்தியா விளையாடும் போட்டிகளை நடத்த பிசிசிஐ முறையிட்டு வருகிறது. அதேநேரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பாகிஸ்தான் வருவதை தவிர்க்க இந்தியாவுக்கு என்ன காரணம் என எழுத்துப்பூர்வமாக பிசிசிஐ தெரிவிக்காத வரை ஹைபிரிட் மாடலில் தொடரை நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை இணங்க முடியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு ஆட்டம் காட்ட துடிக்கும் ஆஸ்திரேலியா.. மூன்று முகம் பார்முலா ஒர்க்காகுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.