ஐதராபாத்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3-க்கு 0 என்ற கணக்கில் இழந்தது. 12 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணி முதல் முறையாக இழந்தது. அதேபோல் 92 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் 3-க்கு 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் உள்ளிட்டோர் இணைந்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோருடன் 6 மணி நேரமாக பல்வேறு விஷயங்களை விவாதித்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த தோல்வி காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் மீது ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதனிடையே பிசிசிஐ தரப்பில் விரைவில் ரிவ்யூ மீட்டிங் நடக்கும் என்று கூறப்பட்டது.
After India were at the receiving end of a rare 3-0 series loss against New Zealand at home, Board of Control for Cricket in India (BCCI) officials – president Roger Binny and secretary Jay Shah - had a review meeting with captain Rohit Sharma, head coach Gautam Gambhir and Chief…
— RJ Ritesh-journalist #Nation 1st (@rjritesh1987) November 8, 2024
இந்த நிலையில் மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி, தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்டோர் சந்தித்தனர். தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வீடியோ கால் மூலமாக மீட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். இந்த ஆலோசனை சுமார் 6 மணி நேரம் வரை நீடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சந்திப்பில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பகிறது. சொந்த மண்ணில் அடைந்த தோல்விக்கு பின் இந்திய அணி நிச்சயம் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதில் பிசிசிஐ தீவிரமாக இருப்பதாகவும், கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டதை பிசிசிஐ நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கேள்விகள் எழுந்த போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டதாக பதில் அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல் புனே மைதானத்தில் ஸ்பின்னுக்கு சாதகமான பிட்சில் இந்திய அணி தோல்வியை சந்தித்த நிலையில், மீண்டும் மும்பையிலும் ரேங்க் டர்னர் பிட்சை தயார் செய்தது ஏன் என்று கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்பின் ஜெய் ஷா, ரோஜர் பின்னி மற்றும் அஜித் அகர்கர் தரப்பில் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் கோச்சிங் ஸ்டைல் குறித்தும் ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய அணியில் உள்ள சில நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடு இருப்பது தெரிய வந்ததாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: 3.5 புள்ளிகளுடன் அர்ஜுன் எரிகைசி முதலிடம்!