ராஜ்கோட்: இந்தியா - இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி, தற்போது ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் இரண்டாம் நாளான நேற்று (பிப்.17), அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 500வது விக்கெட்டை வீழ்த்தி தனது குடும்பத்தினரின் ஆசையை நிறைவேற்றினார்.
இந்நிலையில், அஸ்வின் தாயார் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அஸ்வின் தற்காலிகமாகப் போட்டியிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக தேவ்தட் படிக்கல் பீல்டிங் செய்தார்.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்றாவது நாளான இன்று (பிப்.18) சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பங்கேற்க மாட்டார் எனவும், குடும்ப மருத்துவச் சிகிச்சை காரணமாகத் தற்காலிகமாகப் போட்டியிலிருந்து விலகி உள்ளார் என பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், "ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா - இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது நாளான நாளைய (பிப்.19) போட்டியில் பங்கேற்பார் என பிசிசிஐ உறுதி அளித்துள்ளது. அஷ்வினை வரவேற்பதில், பிசிசிஐ மற்றும் அணி நிர்வாகம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறது" என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: "500 விக்கெட்கள் சாதனையை தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்"- அஷ்வின் உருக்கம்!