சுங்ஜு : 2024ஆம் ஆண்டுக்கான உலக ஆசியன் ஓசியன் ஒலிம்பிக் மாற்றும் பாராலிம்பிக் ரெகட்டா படகுப் போட்டி தென் கொரியாவின் சுங்ஜு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றை ஸ்கெல் சுற்றில் இந்திய வீரர் பல்ராஜ் பவார் 3வது இடம் பிடித்து வெண்கலம் பதக்கம் வென்றார்.
மேலும் இந்த சுற்றில் மூன்றாவது இடம் பிடித்ததன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் படகு போட்டிக்கு தகுதி பெற்றார். 2024 ஆம் ஆண்டுக்கான பாரீஸ் ஒலிம்பிக் தொடர் ஜூலை மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அதை முன்னிட்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றுகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன.
அதன்படி தென் கொரியாவில் நடைபெற்ற ரோவிங் படகு போட்டியில் ஆடவர் தனிநபர் சுற்றில் இந்திய வீரர் பல்ராஜ் பவார் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்று உள்ளார். 2 ஆயிரம் மீட்டர் பந்தைய தூரத்தை பல்ராஜ் பவார் 7:01.27 நிமிடங்களில் கடந்து வெண்கலம் வென்று சாதனை படைத்தார்.
ஆரம்பத்தில் மெதுவாக போட்டியை தொடங்கிய பல்ராஜ் பவர் இறுதிக் கட்டத்தில் அசூர வேகத்தில் துடுப்பு போட்டு சக வீரர்களை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தினார். கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த விளாடிஸ்லாவ் யாகோவ்லேவ் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
ஆடவர் தனிநபர் பிரிவில் முதல் ஐந்து இடங்களை பிடித்த வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றனர். முன்னதாக ஆடவர் லைட்வெயிட் டபுள் ஸ்கெல் பிரிவில் இந்திய ஜோடி ஒலிம்பிக் தொடருக்கான வாய்ப்பை கைப்பற்றுவதில் கோட்டை விட்டது. இந்திய இணை பந்தைய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்த போதிலும் ஒலிம்பிக் தொடருக்கான டிக்கெட்டை பெறும் வாய்ப்பை நழுவவிட்டது.
இதையும் படிங்க : "கல்லூரி மாணவி கொலை லவ் ஜிகாத் சதி.. குற்றவாளிகளை பாதுகாக்க காங்கிரஸ் முயற்சி" - கர்நாடக பாஜக தலைவர்! - Karnataka College Girl Murder