அடிலெய்டு(ஆஸ்திரேலியா): ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் கொண்ட இரண்டு நாள் தொடரில் விளையாடியது. முதல் நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. அதன்படி, இரண்டாவது டி20 போட்டி நேற்று(பிப்.11) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியா அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் - ஜோஷ் இங்லிஸ் ஜோடி களமிறங்கியது. முதல் ஓவரின் 2வது பந்தில் வார்னர் சிக்ஸ்-ஐ விளாசினார். அடுத்த பந்தை பவுண்டரி லைன்னுக்கு விளாசினார்.
2வது ஓவரில் ஜோஷ் இங்லிஸ் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக, மிட்சல் மார்ஸ் களம் கண்டார். இவர், தனது முதல் பந்தில் பவுண்டரியை விளாசினார். 5 ஓவர் முடிவிற்கு ஆஸ்திரேலிய அணி 53 -1 என்ற கணக்கில் விளையாடியது.
6வது ஓவரில் மிட்செல் அவுட் ஆக, மேக்ஸ்வெல் களம் கண்டார். அணிக்கு சிறப்பாக விளையாடிய வார்னர் 19 பந்துகளுக்கு 3 பவுண்டரிகள், 1 சிக்ஸ் வீதம் 22 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 10 ஓவர் முடிவிற்கு 99-3 என்ற கணக்கில் விளையாடியது.
11வது ஓவரில் மேக்ஸ்வெல் தொடர்ந்து ஹட்ரிக் பவுண்டரியை விளாசினார். 12வது ஓவரில் தனது அரை சதத்தைப் பதிவு செய்தார். 14வது ஓவரில் ஸ்டோனிஸ் தனது விக்கெட்டை இழக்க, டிம் டேவிட் களம் கண்டார். 15வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 150 ரன்களை கடந்தது. டிம் டேவிட் - மேக்ஸ்வெல் இருவரும் இணைந்து பவுண்டரி, சிக்ஸ் என மாறி மாறி விளாசினர். 19வது ஓவரில் ஆஸ்திரேலியா 200 ரன்களை கடந்தது. மேக்ஸ்வெல் தனது சதத்தைப் பதிவு செய்தார்.
20வது ஓவரில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸ் கிடைத்தது. மேக்ஸ்வெல் - டிம் டேவிட் பார்ட்னர் ஷிப்பில் 95 ரன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு கிடைத்தது. இன்னிங்க்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. இதில், மேக்ஸ்வெல் சதத்தைப் பதிவு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹோல்டர் 2 விக்கெட்டுகளையும், ரொமாரியோ ஷெப்பர்ட், அல்சாரி ஜோசப் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
242 எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இன்னிங்க்ஸ்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக, பிராண்டன் கிங் - ஜான்சன் சார்லஸ் ஜோடி களமிறங்கியது. பிராண்டன் தனது 2வது பந்தில் முதல் பவுண்டரியை பதிவு செய்தார். 2வது ஓவரில் பிராண்ட் கிங் தனது ஆட்டத்தை இழந்தார்.
பின் நிக்கோலஸ் பூரன் களம் கண்டார். பூரன் 3வது 3 ஹட்ரிக் சிக்ஸ்களை பதிவு செய்தார். 5வது ஓவரில் பூரன் அவுட் ஆக, வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ரன்களை கடந்தது. 5 ஓவர் முடிவிற்கு 56 - 2 என்ற கணக்கில் விளையாடியது.
ஷாய் ஹோப் களம் காண, ரன் எடுக்காமல் வந்த வேகத்தில் பெவிலியன் சென்றதால், ரோவ்மேன் பவல் களத்திற்கு வந்தார். 6 வது ஓவரில் ஜான்சன் சார்லஸ் அவுட் ஆக, இந்த ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இரண்டு விக்கெட்கள் சரிந்தன. 6 ஓவர் முடிவில் 62-4 என்ற கணக்கில் விளையாடியது.
7வது ஓவரில் ஜான்சன் அவுட் ஆக, ரஸேல் களம் கண்டவுடன், அடுத்தடுத்து 3 ஹெட்ரிக் பவுண்டரிகளை பதிவு செய்தார். 10வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 100 ரன்களைக் கடந்தது. 11வது ஓவரில் ரஸ்ஸேல் அவுட் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பவேல் சிக்ஸ், பவுண்டரி என மாறி, மாறி விளாசினார்.
15வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களைக் கடந்தது. 16வது ஓவரில் பவேல் 50 ரன்களைக் கடந்தார். ரொமாரியோ ஷெப்பர்ட் பெஹ்ரன்டோர்ஃப் பந்தை எதிர் கொள்ள முடியாமல் தனது ஆட்டத்தை இழந்தார். அடுத்ததாக பவேல் உடன் ஹோல்டர் களம் கண்டார்.
சிறப்பாக விளையாடிய பவேல் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின், அகேல் ஹொசின் களம் கண்டார். 18வது ஓவரில் ஹோல்டர் ஹெட்ரிக் பவுண்டரியை விளாசி ரன்களைச் சேர்த்தார். அகேல் ஹொசின் சொற்ப ரன்களில் அவுட் ஆனார். 20வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 200 ரன்களைக் கடந்தது. 20 ஓவர் முடிவிற்கு 9 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்களை குவித்தது.
இதில், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தொடர்ச்சியாக, ஹெட்ரிக் பவுண்டரிகள், சிக்ஸ் களை விளாசினார். ஆஸ்திரேலிய அணியில், மார்கஸ் ஸ்டோனிஸ் 3 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட் , ஸ்பேன்சர் ஜான்சன் தலா 2 விக்கெட்டுகளையும், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஆடம் சம்பா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர். இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: U19 World CUP: இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 4வது முறை சாம்பியன்!