ஐதராபாத்: டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா நேற்று (அக்.9) இரவு காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கஒப்பட்டு இருந்த நிலையில், ரத்தன் டாடாவின் உயிர் பிரிந்தது. இந்திய பொருளாதாரத்திற்காக ரத்தன் டாடா ஆற்றிய பங்குகள் அளப்பறியது.
அதேநேரம், இந்திய பொருளாதாரத்தை கட்டமைத்தவர்களின் மிக முக்கியமானவர், தொழிலதிபர், சிறந்த நன்கொடையாளர், சமூகத் தொண்டாளர், இந்திய வணிகத்தின் தூண் என பல முகங்களாக ரத்தன் டாடா உலகிற்கு காணப்பட்டாலும், சிறந்த விளையாட்டு ஆர்வலர் என்ற முகமும் அவருக்கு உண்டு.
குறிப்பாக ரத்தன் டாடா கிரிக்கெட் விளையாடின் மீது அதீத ஆர்வம் கொண்டு இருந்தார். டாடா நிறுவனமும் ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் தொடர்களுக்கு விளம்பர பங்குதாரர்களாக இருந்தது உலகம் அறிந்தது. இந்திய கிரிக்கெட் மற்றும் வீரர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர் ரத்தன் டாடா.
டாடா குழுமத்திற்கும் இந்திய கிரிக்கெட்டுக்குமான தொடர்பு:
டாடா குழுமத்தின் உதவியின் மூலம் பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வாழ்நாளில் கரை சேர்ந்ததும் உண்டு என்றால் அது மிகையாகாது. டாடா குழுமத்தின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அவர்களுக்கான நிதி உதவி, பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்தது டாடா குழுமம்.
தலைமுறை தாண்டி பல கிரிக்கெட் வீரர்கள் டாடா குழுமத்தின் மூலம் பயன் அடைந்துள்ளனர். அனைவரும் அறிந்த சில கிரிக்கெட் முகங்கள் கூட டாடா குழுமத்துடன் நேரடி தொடர்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் பரூக் மனேக்ச என்ஜினியர் (Farokh Maneksha Engineer) நேரடியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூலம் உதவிகளை பெற்றார்.
விவிஎஸ் லட்சுமணன் முதல் ஷர்துல் தாகூர் வரை:
அதேபோல் கிரிக்கெட் வீரர்கள் சஞ்செய் மஞ்சரேக்கர், ராபின் உத்தப்பா, விவிஎஸ் லட்சுமணன், மொகிந்தர் அமர்நாத் ஆகியோரின் கிரிக்கெட் மற்றும் தனிப்பட்ட பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ததில் ஏர் இந்தியா நிறுவனம் மிகப் பெரிய பங்காற்றியதாக சொல்லப்படுகிறது. டாடா குழுமத்தின் மற்றொரு ஏர்லைன் நிறுவனமான இந்தியன் ஏர்லைன்ஸ் மூலமாகவும் பல கிரிக்கெட் வீரர்கள் பயன் பெற்றதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக, அஜித் அகர்கர் டாடா ஸ்டீல்ஸ் நிறுவனம் மூலமாகவும், ருஷி சுருதி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் மூலமும் பல்வேறு உதவிகளை பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தலைமுறை வீரர்களில் கூட ஷர்துல் தாகூர் (டாடா பவர்), ஜெயந்த் யாதவ் (ஏர் இந்தியா) ஆகியோர் டாடா குழுமத்தின் மூலம் நீண்ட காலங்களாக பயன்பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆசிய டேபிள் டென்னிஸ்: 50 ஆண்டுகால வரலாற்றில் முதல் பதக்கம்! வரலாறு படைத்த இந்திய மகளிர்!