ETV Bharat / sports

இந்திய கிரிக்கெட் தேர்வு குழு உறுப்பினராக அஜெய் ராத்ரா நியமனம்! யார் இவர்? - Ajay Ratra - AJAY RATRA

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு உறுப்பினராக முன்னாள் விக்கெட் கீப்பர் அஜெய் ராத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

Etv Bharat
Ajay Ratra (Photo Source: BCCI)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 3, 2024, 7:44 PM IST

மும்பை: அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு தற்போது இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்து வருகிறது. இந்நிலையில், அந்த தேர்வு குழுவின் புதிய உறுப்பினராக முன்னாள் விக்கெட் கீப்பர் அஜெய் ராத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

தேர்வு குழு உறுப்பினர் சலில் அன்கோலாவின் பதவிக் காலம் நிறைவு பெறுவதை அடுத்து புதிய தேர்வு குழு உறுப்பினராக அஜெய் ராத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வு குழு உறுப்பினர்கள் அணியில் முன்னாள் விக்கெட் கீப்பர் அஜெய் ராத்ரா நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் அஜெய் ராத்ராவுக்கு உண்டு. இந்திய அணிக்காக அஜெய் ராத்ரா 6 டெஸ்ட் மற்றும் 12 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும், 99 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ள அஜெய் ராத்ரா அதில் 4 ஆயிரத்து 29 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 17 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 191 ரன்கள் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கோட் படத்தில் எம்எஸ் தோனி! பரவும் புதிய தகவல்! என்னாவா இருக்கும்? - The Goat Movie MS Dhoni Cameo

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.