சென்னை: சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அல்டிமேட் டேபிள் டென்னிஸ் 2024 தொடரின் நேற்றைய ( செப்.4) கடைசி லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் மற்றும் அகமதாபாத் எஸ்ஜி பைப்பர்ஸ் அணிகள் மோதின.
Ahmedabad SG Pipers become the second team to achieve a historic 12-3 win over Jaipur Patriots.
— Ultimate Table Tennis (@UltTableTennis) September 4, 2024
Catch the full highlights ⏭ https://t.co/oq6DmJsQIn#UTT #UltimateTableTennis #TableTennis #HarShotMeinMazaa #IndianOilUTT pic.twitter.com/g3cynONvMy
இதில் அறிமுக அணியான அகமதாபாத் அணி 12-3 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது. அதையடுத்து, பிளே ஆஃப் சுற்றில் முதல் அணியாக நுழைந்தது அகமதாபாத் அணி. அதேவேளையில், அகமதாபாத் அணியின் வெற்றியால் சென்னை லயன்ஸ் அணி அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
- முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் சோ சியுங்மின், அகமதாபாத் அணியின் லிலியன் பார்டெட்டுடன் மோதினார். இதில் லிலியன் பார்டெட் 2-1 (11-9, 11-10, 10-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
- 2வதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியின் சுதாசினி சவெட்டாபட், அகமதாபாத் அணியின் பெர்னாடெட் சோக்ஸுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில், பெர்னாடெட் சோக்ஸ் 3-0 (11-10, 11-3, 11-6) என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.
- 3வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் சோசியுங்மின், நித்தியஸ்ரீ மணி ஜோடியானது அகமதாபாத் எஸ்ஜி பைப்பர்ஸ் அணியின் மனுஷ் ஷா, பெர்னாடெட் சோக்ஸ் ஜோடியை எதிர்கொண்டது. இதில் மனுஷ் ஷா, பெர்னாடெட் சோக்ஸ் ஜோடி 2-1 (11-9, 11-5, 8-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
- 4வது நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஸ்நேகித் எஸ்எப்ஆர், அகமதாபாத் எஸ்ஜி பைப்பர்ஸ் அணியின் மனுஷ் ஷாவுடன் மோதினார். இதில் மனுஷ் ஷா 2-1 (11-6, 11-6, 8-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
- கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் மவுமிதா தத்தா, அகமதாபாத் எஸ்ஜி பைப்பர்ஸ் அணியின் ரீத் ரிஷ்யாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் ரித் ரிஷ்யா 3-0 (11-10, 11-9, 11-10) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
Clean sweep + perfect doubles record ✅
— Ultimate Table Tennis (@UltTableTennis) September 4, 2024
Top seed Bernadette Szocs wins the @IndianOilcl Player of the Tie between Ahmedabad SG Pipers and Jaipur Patriots 🌟👏
Catch the action live tomorrow at the Jawaharlal Nehru Indoor Stadium. Tickets available on https://t.co/or5ruqsmLk… pic.twitter.com/htxErzEAIF
அகமதாபாத் எஸ்ஜி பைப்பர்ஸ் அணியின் அபார வெற்றியால் 37 புள்ளிகளுடன் 4வதி இடத்திலிருந்த சென்னை லயன்ஸ் அணி 5-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், முன்னாள் சாம்பியனான சரத் கமல் தலைமையிலான சென்னை லயன்ஸ் அணி வெளியேறியது.
லீக் சுற்றின் முடிவில் பெங்களூரு ஸ்மாஸர்ஸ் 48 புள்ளிகளுடன் முதலிடமும், அகமதாபாத் அணி 42 புள்ளிகளுடன் 2வது இடமும், தபாங் டெல்லி அணி 41 புள்ளிகளுடன் 3வது இடமும், நடப்பு சாம்பியனான கோவா சாலஞ்சர்ஸ் அணி 37 புள்ளிகளுடன் 4வது இடமும் பிடித்து பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்தன.
Tracer bullet 🚅🎯
— Ultimate Table Tennis (@UltTableTennis) September 4, 2024
Manush Shah's counter attacking forehand winner is your @Dafanewsindia shot of the tie in tonight's fixture between Ahmedabad SG Pipers & Jaipur Patriots 💫🔥
Catch the action live tomorrow at the Jawaharlal Nehru Indoor Stadium. Tickets available on… pic.twitter.com/YvfwQHVV6u
பிளே ஆஃப் சுற்று இன்று தொடங்கும் நிலையில், இதில் முதல் அரை இறுதிப் போட்டியில் பட்டியலில் முதலிடம் பிடித்த பெங்களூரு ஸ்மாஸர்ஸ் அணி, 4வது இடம் பிடித்த நடப்பு சாம்பியனான கோவா சாலஞ்சர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. தொடர்ந்து நாளை (செப்.6) நடைபெறும் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் 2வது இடம் பிடித்த அறிமுக அணியான அகமதாபாத் அணியும், 3வது இடம் பிடித்த தபாங் டெல்லி அணியுடன் மோதுகிறது.