பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 17வது பாராலிம்பிக் விளையாட்டு தொடர் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நவதிப் தங்கம் வென்றார். முதலில் நவதிப் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிலையில், தங்கம் வென்ற வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவருடைய இடத்திற்கு நவதிப் சென்று தங்கத்தை தட்டிச் சென்றார்.
ஆண்களுக்கான F41 பிரிவில் கலந்து கொண்டு ஈட்டி எறிந்த இந்திய வீரர் நவதிப் 47.32 மீட்டர் தூரத்திற்கு எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஈரானை சேர்ந்த Beit Sadgeh 47.64 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கம் வென்றார். இந்நிலையில், நடத்தை விதிகளை மீறியதாக ஈரான் வீரர் Beit Sadgeh தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
Navdeep Singh Won Gold Medal In Paris Paralympics. 🥇
— Addy Boss 🇮🇳 (@addy__boss) September 7, 2024
After Throw He Said- Hattt Bhnchd, teri m** ki cht😂
First He Won Silver Medal But The Iran's Beit Sayah's Got Disqualified, Then Navdeep Got Upgraded To Gold Medal.
Proud Of You Champ.🎉#NavdeepSingh #Iran #BeitSayah… pic.twitter.com/dPOQdL0kou
இதனால் அவரிடம் இருந்த தங்கப் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து இரண்டாவது இடத்தில் இருந்த நவதிப் தானாக முதலிடத்திற்கு முன்னேறியதால் அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இதன் மூலம் பாரீஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் இந்தியா 7வது தங்கத்தை தட்டிச் சென்றது.
மேலும், ஆடவர் ஈட்டி எறிதல் F41 பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பையும் நவதிப் பெற்றார். 23 வயதான நவதிப் கடந்த டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு தொடரில் நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். பாராலிம்பிக்சில் பதக்கம் வென்ற நவதிப் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அந்த பதிவில், "நம்ப முடியாத அளவில் இந்திய வீரர் நவ்தீப் பாராலிம்பிக்ஸ் 2024ல் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்41 போட்டியில் பதக்கம் வென்றார். அவரது வெற்றி அவரது சிறந்த மனநிலையின் பிரதிபலிப்பாகும். அவருக்கு வாழ்த்துகள். அவரால் இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
The incredible Navdeep has won a Silver in the Men’s Javelin F41 at the #Paralympics2024! His success is a reflection of his outstanding spirit. Congrats to him. India is delighted. #Cheer4Bharat pic.twitter.com/NfziEdoCbQ
— Narendra Modi (@narendramodi) September 7, 2024
ஈரான் வீரர் பதக்கம் பறிபோக என்ன காரணம்?
முதலில் தங்கப் பதக்கம் வென்ற ஈரான் வீரர் Beit Sadgeh, பட்டம் வென்றதை ரசிகர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார். சொந்த நாட்டின் கொடிக்கு பதிலாக வேறொரு அமைப்பு அல்லது குழு சார்ந்த கொடியை Beit Sadgeh தோளில் சுமந்து கொண்டு வலம் வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் நடத்தை விதிகளை மீறியதாக கூறி Beit Sadgeh-ஐ பாராலிம்பிக்ஸ் போட்டி அமைப்பாளர்கள் தகுதி நீக்கம் செய்தனர்.
தொடர்ந்து அவருக்கு போட்டி நடுவர்கள் சார்பில் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேநேரம் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது அவர் தோளில் சுமந்து கொண்டு இருந்த கொடி குறிப்பிட்ட பயங்கரவாத அமைப்பின் கொடி எனக் கூறப்படுகிறது. தடை செய்யப்பட்ட அமைப்பின் கொடியை பயன்படுத்தியதன் காரணமாக அவரது பதக்கம் பறிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Ultimate Table Tennis 2024: சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த கோவா! டெல்லி படுதோல்வி! - UTT Table tennis result