பாரீஸ்: 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று (ஜூலை.29) 10 மீட்ட ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் மனு பாகெர், சரபோஜித் சிங் இணை விளையாடியது.
🇮🇳 𝗔𝗡𝗢𝗧𝗛𝗘𝗥 𝗠𝗘𝗗𝗔𝗟 𝗜𝗡𝗖𝗢𝗠𝗜𝗡𝗚? A superb performance from Manu Bhaker and Sarabjot Singh as they finish 03rd to have a chance at securing a Bronze medal for India.
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) July 29, 2024
🔫 They finished with a score of 580-2x.
👉🏻 They will face 🇰🇷 in the 🥉 match.
😔 Rhythm Sangwan… pic.twitter.com/Ii4Uhb8IBV
இந்திய இணை 580 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தை பிடித்து பதக்க வாய்ப்புக்கான போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு இந்திய ஜோடி ரிதம் சங்வான் மற்றும் அர்ஜுன் சீமா 576 புள்ளிகள் எடுத்து 10வது இடத்தை பிடித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. இந்திய இணை மனு பாகெர், சரபோஜித் சிங் நாளை (ஜூலை.30) மதியம் 1 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.
இதன் மூலம் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகி உள்ளது. அதேநேரம் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை ரமீதா ஜிந்தல் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டார். ரமீதா ஜிந்தல் இறுதி வாய்ப்பில் 0.3 புள்ளிகள் வித்தியாசத்தில் பிரான்ஸ் வீராங்கனையிடம் தோல்வியை தழுவினார்.
இதையும் படிங்க: "சாம்பியன்ஸ் டிராபி விளையாட இந்திய அணி பாகிஸ்தான் பயணம்.. ஆனால்"- ராஜீவ் சுக்லா போடும் புதிர் என்ன? - Champions Trophy cricket 2025