ETV Bharat / spiritual

துலாம் ராசிக்காரர்கள் காதல் வயப்படும் வாய்ப்புண்டு.. உங்க ராசிக்கு எப்படி? - TODAY RASIPALAN

அக்டோபர் 19ஆம் தேதி சனிக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைக் காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2024, 7:01 AM IST

மேஷம்: உங்களால் சிலரின் இதயங்கள் இன்று புண்படலாம். மற்றபடி உங்களின் காதல் வாழ்க்கை சிறப்பானதாகவே இருக்கும். பிரியமானவரின் தேவைகளை பூர்த்தி செய்யத் தயாராக இருப்பீர்கள். திருமணமானவர்களுக்கு இடையேயான உறவுகள் மிகவும் ஆழமானதாகவும், வலுவான பிணைப்புள்ளதாகவும் இருக்கும்.

ரிஷபம்: பணிகள் இன்று மிகக் கடினமானதாக இருக்கலாம். இருப்பினும், அதற்கான பலன் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. பிற்பகலில் பயணம் செய்வது தொடர்பாக நீங்கள் உற்சாகம் இழந்து காணப்படுவீர்கள். மாலை நேரத்தில் ஓய்வு மற்றும் காதல் கனிந்த பேச்சுகள் நடைபெறவும் வாய்ப்புகள் உள்ளன.

மிதுனம்: இன்று குடும்பத்தில் கொண்டாட்டத்துக்கான தருணம். தொழில் ஒப்பந்தங்களில் நீங்கள் பரபரப்பாக இருந்தாலும், உங்கள் குடும்பத்தினரிடையே கொண்டாட்டம் காணப்படும். இந்நாளின் பிற்பகுதியில் தொழில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளன. தனிப்பட்ட சாதனைகளுக்கான கொண்டாட்டங்கள் இருந்தாலும், தொழில் ரீதியாக வெற்றி பெற உங்களுக்கான நேரம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

கடகம்: மற்றவர்கள் செய்ய வேண்டிய பணிகளையும் மேற்கொண்டு வேலைப்பளு ஏற்படுத்திக் கொள்வதைத் தவிர்க்கவும். தொழிலை பொறுத்தவரையில் எதிரிகள் மற்றும் போட்டியாளர்கள் தங்கள் தந்திரத்தில் தோல்வி அடைவார்கள். இந்த உத்தியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.

சிம்மம்: உணர்ச்சிகளுக்கு மிகுதியாக ஆட்பட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. வாழ்க்கையில் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றவும், அதற்காக மனப்பாங்கை மாற்றிக்கொள்ளவும் வாழ்க்கையின் அனைத்து அங்கத்திலும் நீங்கள் இன்று சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் வீட்டை மீண்டும் அலங்கரிக்கவும், புதுப்பிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக ஏற்றம் மிக்க நாள் காத்திருக்கிறது.

கன்னி: இன்று கிடைக்கக்கூடிய பட்டப்பெயர் மிகுந்த மனஉளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தலாம். நீங்கள் இதுவரை சேமித்து வைத்ததற்கு மேல் இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், உங்கள் திருமண உறவில் மகிழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.

துலாம்: உங்கள் நடை, உடைகள் உங்கள் தோற்றத்தையும் அழகையும் மெருகேற்றுவதாக அமையும். மக்கள் உங்கள் அழகு அல்லது தோற்றத்தால் கவரப்படுவார்கள். இன்று மாலை நடைபெறும் பொது நிகழ்ச்சிகள், சிலருடன் உங்களை நெருக்கமானதாக்கும். காதல் வயப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

விருச்சிகம்: அவசரகதி முடிவுகள் பலன் தராது. உங்கள் திட்டங்களை முடிவு செய்வதற்கு முன்பு ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். இல்லாவிட்டால் திட்டங்கள் பாழாகிவிடும். உங்கள் முயற்சிக்கு ஏற்ப பலன் கிடைக்காமல் போகலாம். தொழில் ரீதியாக இன்று பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. மாலைப்பொழுதை உங்களுக்கு பிடித்தமானவருக்கு சிறப்பானதாக ஆக்குங்கள்.

தனுசு: இன்று அமைதியாக காணப்படுவீர்கள். சுயபரிசோதனை செய்து கொள்ளும் மனநிலையில் இருப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் மன உணர்வுகளை இன்று வெளிப்படுத்துவீர்கள். பிற்பகலில், வியாபார ரீதியாக சிலரை சந்திக்கலாம் அல்லது பொழுதுபோக்குக்காக நேரம் ஒதுக்குவீர்கள். இதனால், மாலையில் நீங்கள் பணம் செலவு செய்வீர்கள்.

மகரம்: இன்றைய நாள் உங்களுக்கு சமன் செய்யப்பட்ட நாளாக இருக்கும். ஒருபுறம் நீங்கள் இலக்கை எட்டுவதற்கு கடினமாக உழைப்பீர்கள். மறுபுறம் பொழுது போக்கிற்காக சிறிது நேரம் ஒதுக்குவீர்கள். உங்கள் மேலதிகாரி மற்றும் உடன் பணியாற்றுபவர்கள் உங்களை புகழ்வார்கள். இருப்பினும், மின்னுவதெல்லாம் பொன்னல்ல. எனவே, முகஸ்துதிகளை பொருட்படுத்தாதீர்கள். ஏனெனில், அவற்றின் உட்பொருள் உங்களுக்கு புரியாமல் போகலாம். இன்றைய நாள் மாணவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும்.

கும்பம்: இன்று கொண்டாட்டத்துக்கான சிறிய காரணமாவது உங்களுக்கு தேவை. அதற்கேற்ப நல்ல செய்தி வந்து சேரும். இன்றைய நாள் உற்சாகத்துடன் தொடங்கி, நாள் முழுவதும் நீடிக்கும். புதிய மக்களை சந்திப்பீர்கள். அவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வீர்கள். மாலையில் உங்களுக்கு பிரியமானவருடன் நேரத்தைச் செலவழிப்பதன் மூலம் இன்றைய நாளின் முடிவு மிகச்சிறந்ததாக இருக்கும்.

மீனம்: திருமணம் ஆகாதவர்கள் திருமணப் பந்தத்தை ஏற்படுத்துவதற்கு ஏற்ற நாள் இன்று. காதலர் அல்லது வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். புதிய உறவை அல்லது நட்பை ஏற்படுத்தவும், பழைய உறவுகளை புதுப்பிக்கவும் இன்று ஏற்ற நாள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.