மேஷம்: நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்களுடைய உற்சாகத்தை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இது பலவற்றை திட்டமிடுவதைக் காட்டிலும் அதனை செயல்படுத்துவதற்கான ஒரு நேரம். இன்றை நாளின் பிற்பகுதியில் நீங்கள் கொண்டாடி மகிழலாம்.
ரிஷபம்: இன்றைய நாள் முழுவதும் சக்தி, களிப்பு, உற்சாகப் பிரவாகம் ஆகிய மூன்று உணர்ச்சிகள் ஆட்கொண்டிருக்கும். உங்களுக்கு எப்போதும் உற்சாகம் நிறைந்திருக்கும். இதனால், உங்கள் அன்புக்குரியவர்களும், உங்கள் அருகாமையில் உள்ளவர்களும் இன்புறுவார்கள். நாள் செல்ல செல்ல நற்பலனும் அதிகரிக்கும்.
மிதுனம்: உங்களுடைய காதல் வாழ்க்கை சில ஏற்ற, இறக்கங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. அக்கறையும் கவனிப்பும் கட்டாயமான தேவையாக இருக்கும். பண விவகாரத்தில் அநேகமாக நீங்கள் துணிந்து செயல்படக்கூடும். நிறைய யோசிக்காமல் உங்கள் நம்பிக்கையைக் காத்து அகமகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும்.
கடகம்: உங்கள் அவசர மனோபாவம் உங்கள் செயல்பாட்டை பாதிக்கும். எதிர்மறை கண்ணோட்டங்களைத் தவிர்த்து நேர்மறை விஷயங்களை மட்டும் கவனிக்கவும். வெறும் சிந்தனை என்றில்லாமல் செயல்படுவதால் நற்பலன்கள் விளையும்.
சிம்மம்: உங்களை நம்பி உள்ள ஒவ்வொருவருக்கும் நீங்கள் நியாமாக செயல்பட வேண்டும். நீங்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டதற்கு உரிய சன்மானங்களைப் பெறுவீர்கள். உங்கள் நன்மை நாடும் தன்மையும் இயலுந்தன்மையும் உங்களை அமைதியாக வைத்திருக்கும்.
கன்னி: இன்று நீங்கள் செல்வாக்கான பதவியை எதிர்பார்க்கலாம். உங்களுடைய நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருக்குப் பரிசு வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். உங்கள் நெருங்கிய நண்பர் அல்லது குடும்பத்தினருடன் நீண்ட கால இலக்குகளைத் திட்டமிடுவதில் உங்கள் மாலைப்பொழுது கழியும்.
துலாம்: எவ்வளவு உண்மை பேசுகிறோமோ, அவ்வளவு நல்லது. நெருங்கிய மற்றும் தூரத்து உறவினர்கள் இன்று உங்கள் மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள். கொண்டாட்டத்திற்கு உரித்தான சில நல்ல செய்தி கிடைக்கும்.
விருச்சிகம்: பிரச்சனைகளை சரிசெய்வதில் நீங்கள் அநேகமாக உங்கள் திறமையை வெளிப்படுத்தக்கூடும். உங்கள் பணியிடத்தில் நீங்கள் செய்யும் வேலையின் மீது உங்களுக்கு மிகுந்த விருப்பம் ஏற்படும். நாளின் பிற்பகுதியில், நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு நிலையான தீர்வுகளை எட்டுவீர்கள்.
தனுசு: உங்கள் துறைசார் தளங்களில் உங்களுடைய புத்திசாலித்தனத்தை உங்கள் தொழில் போட்டியாளர்களுக்கு காட்டுவீர்கள். கடும் போட்டியில் வென்றதைக் கொண்டாடுவதற்கான நாள் இது. சமூக சந்திப்புகளில் மகிழ்வதில் மாலை நேரம் கழியும்.
மகரம்: புதிய பொருளை நீங்கள் அறிமுகப்படுத்துகிறீர்கள் என்றால் கொஞ்சம் தள்ளிப்போடுங்கள். இவ்வாறு அறிமுகப்படுத்துவதைத் தாமதப்படுத்துவது நன்மை தருவதாக இருக்கும். இருந்தபோதும், உங்கள் திட்டப்படி நடப்பதில் உறுதியாக இருந்தீர்களானால், ஏமாற்றங்களை சந்திக்க ஆயத்தமாயிருங்கள். ஏனென்றால், விளைவு நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நன்மை அளிப்பதாக இல்லாமல் போகக்கூடும்.
கும்பம்: உங்கள் லட்சியம் உங்களை அடக்குமுறையாளராக ஆக்குகிறது. இன்று பேசக்கூடாதவற்றைப் பேசிவிடுவதற்கு வாய்ப்புள்ளது. நீங்கள் மிகவும் வலியுறுத்துபவராகவும், கட்டாயப்படுத்துபவராகவும் இருந்தால், நாளை வருத்தப்படக் கூடும். அதீதமான முடிவுகள் எடுப்பதற்கு வற்புறுத்துவதைத் தவிருங்கள்.
மீனம்: உங்களது நெருக்கமானவர்கள் மற்றும் விருப்பமானவர்களுக்காக நீங்கள் பணிந்து நடந்து கொள்வீர்கள். நீங்கள் மிகவும் அளவுக்கு அதிகமாக உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை என்றாலும் கூட, உங்களுக்கு நெருக்கமானவர் நன்மைக்காக உங்கள் வசதியை தியாகம் செய்வீர்கள். முக்கியமான முடிவுகளை சில நாட்களுக்குத் தள்ளிப் போடுவது சிறந்தது.