தூத்துக்குடி: தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலில் நாள்தோறும் மாலை 6 மணியளவில் தங்கத்தேர் கிரிப்பிரகாரம் சுற்றி வருவது வழக்கமாகும். ஆனால், கோயிலில் பெருந்திட்ட வளாக பணிகள் நடைபெறுவதால், கடந்த ஜீலை 17 ஆம் தேதி முதல் தங்கத்தேர் வருவது ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கந்தசஷ்டி விழா நேற்று (நவ.2) தொடங்கி நவ.7ஆம் தேதி சூரசம்ஹாரமும், 8ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு, நேற்று முதல் நவ.6 ஆம் தேதி வரையில் தினசரி மாலை கிரி பிரகாரத்தில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறும் என்றும் அதன் பிறகு பணிகளை பொறுத்து தங்கத்தேர் புறப்பாடு மீண்டும் தொடங்கும் என நிர்வாகம் தெரிவித்தது.
இதையும் படிங்க: மதுவுக்கு அடிமையான மகன் கொலை.. தூத்துக்குடியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது..!
அதன்படி, நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா, யாகசாலை பூஜையுடன் அதிகாலை தொடங்கியது. மாலையில் திருவாவடுதுறை ஆதின சஷ்டி மடத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேக அலங்காரம் நடந்து தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து மாலையில் சுவாமி ஜெயந்திநாதர் தங்கத்தேரில் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இந்த தங்கத்தேரினை வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் உள்பட முருக பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்