ETV Bharat / spiritual

ஆவணித் திருவிழா; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொடியேற்றம்! - TIRUCHENDUR MURUGAN TEMPLE

Tiruchendur Subramanya Swamy Temple: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் கோயிலில் கொடியேற்றம்
திருச்செந்தூர் கோயிலில் கொடியேற்றம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 8:08 PM IST

Updated : Aug 24, 2024, 9:17 PM IST

தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம் இன்று கோலாகலமாகத் தொடங்கியது.

திருச்செந்தூர் கொடியேற்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு திருச்செந்தூர் ஆகும். முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்து கோயில்கள் மலை குன்றின் மேல் அமர்ந்திருக்கும். 2ஆம் படை வீடான திருச்செந்தூரில் மட்டும் முருகன் கடலோரப் பகுதியில் வீற்றிருப்பார். மும்மூர்த்தியாய் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி தரும் ஆவணித் திருவிழா திருச்செந்தூரில் புகழ்பெற்றதாகும்.

திருச்செந்தூரில் 12 நாள்கள் நடத்தப்படும் ஆவணித் திருவிழா இன்று (ஆகஸ்ட் 24) கொடியேற்றத்துடன் துவங்கியது. இதற்காக கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, கொடிமரம் மற்றும் கொடிக்கு கும்ப பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து, கோயிலில் உள்ள கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்க வழிபாடு செய்தனர். முன்னதாக, கொடி மரத்திற்கு பால், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தர்ப்பை புல் கொண்டு அலங்கரிக்கட்டு விஷேச சோடச தீபாராதனையும் நடைபெற்றது.

ஆவணி திருவிழா செப்டம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறும். 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், ஒவ்வொரு நாளும் சுவாமியும், அம்பாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்வுகளாக, ஐந்தாம் நாள் குடவரைவாயில் தீபாராதனையும், ஏழாம் நாள் முருகப் பெருமான் சிவப்பு சாத்தி கோலத்திலும், எட்டாம் நாளில் பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி காட்சி கொடுக்க உள்ளார்.

மேலும், செப்டம்பர் 2ஆம் தேதி திரு தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்திற்கு வரக்கூடிய பக்தர்களின் வசதிகளுக்காக, கோயில் நிர்வாகம் சார்பில் கோயில் வளாகத்தில் கூடுதலாக கழிப்பறை வசதிகளும், 5 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து, பக்தர்களின் பாதுகாப்பிற்காக திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்த்ராஜ் தலைமையில் கூடுதலாக 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: உருகி சொல்லுங்கள் முருகனின் பேரை.. களைகட்டும் பழனி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு!

Last Updated : Aug 24, 2024, 9:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.