ETV Bharat / opinion

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024: தொலைக்காட்சி விவாதத்தில் ஓங்கி ஒலித்த ட்ரம்ப் குரல்; அடக்கி வாசித்த பைடன்! - US Presidential Election 2024 - US PRESIDENTIAL ELECTION 2024

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, இன்னாள் அதிபர் ஜோ பைடன், முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. நாட்டின் பாதுகாப்பு, கருக்கலைப்பு சட்டம், வெளியுறவுக் கொள்கை என பல்வேறு முக்கிய விஷயங்களை முன்வைத்து நடைபெற்ற இவ்விவாதத்தில் ட்ரம்பின் குரலே ஓங்கி இருந்தது. அதிபர் ஜோ பைடன் அடக்கி வாசித்ததை, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்களே விரும்பவில்லை.

ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப்
ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப் (Image Credit - IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 4:07 PM IST

ஹைதராபாத்: அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஆளும் ஜனநாயகக் கட்சி, எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் விரைவில் தொடங்கி உள்ளது. இதன் ஒரு முக்கிய பகுதியாக, தற்போதைய அதிபரும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக மீண்டும் களமிறங்க திட்டமிட்டுள்ள ஜோ பைடன், முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையேயான தொலைக்காட்சி விவாதம் அண்மையில் அரங்கேறியது.

50 மில்லியன் பார்வையாளர்கள்: ஒவ்வொரு அதிபர் தேர்தலின்போதும் பிரபல தனியார் தொலைக்காட்சி (CNN) நிறுவனம் நடத்தும் இவ்விவாத நிகழ்ச்சி, அமெரிக்க குடிமக்களை தாண்டி உலகளாவிய அளவில் கவனம் பெறுவது வழக்கம். அதேபோன்று, 2024 அதிபர் தேர்தலை முன்னிட்டு சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பைடன், ட்ரம்ப் இடையேயான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி அமெரிக்காவை தாண்டி, சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இருவருக்கும் இடையே 90 நிமிடங்கள் நடைபெற்ற விவாதத்தை மொத்தம் 50 மில்லியன் (ஐந்து கோடி பேர்) பேர் பார்த்துள்ளனர் என்பதே இந்த நிகழ்ச்சிக்கு அமெரிக்க குடிமக்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை பறைச்சாற்றுகிறது.

அதிபர் வேட்பாளராக போட்டியிடுபவர்களின் தேர்தல் வாக்குறுதிகள், கொள்கைகள், அமெரிக்கா குறித்த அவர்களின் பார்வை, சர்வதேச விவகாரங்களில் அவர்களின் நிலைப்பாடு என பல்வேறு முக்கியமான அம்சங்கள் இந்த விவாதத்தில் இடம்பெறும் என்பதால்தான், இவ்விவாத நிகழ்ச்சி பொதுமக்கள் மத்தியில் இவ்வளவு ஆளுமையை தொடர்ந்து செலுத்தி வருகிறது.

வயதாகிவிட்டது என்ற விமர்சனம்: சமீபத்தில் நடைபெற்ற விவாதத்தில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடனின் ஆட்சி, நிர்வாக செயல்பாடுகள், அவரது வயது மற்றும் ஆரோக்கியம் ஆகியவை முக்கிய அம்சங்களாக பார்க்கப்பட்டன. 81 வயதான அதிபர் ஜோ பைடன், பொது நிகழ்ச்சிகளில் பேசும்போதும், பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, திடீரென ஞாபகமறதிக்கு ஆளானவரை போலவும், குழப்பமான மனநிலையில் இருப்பவரை போலவும் வெளிப்பட்டுள்ளார். அத்துடன், பொது விழாக்களில் கால் தவறி விழுவதும், சகாக்கள் அவரை தூக்கிவிடும் சம்பவங்கள் கடந்த நான்காண்டுகளில் அவ்வப்போது நிகழ்ந்துள்ளது. இத்தகைய சூழலில், மீண்டும் பைடன் அதிபராக தேர்ந்தெடுகக்கப்பட்டால், தமது 86 வயதுவரை அமெரிக்காவை அவரால் திறம்பட நிர்வகிக்க முடியுமா? சர்வதேச பிரச்னைகளை திறம்பட கையாள இயலுமா? என்பன போன்ற கேள்விகளை எதிர்க்கட்சியினர் முன்வைப்பது இயல்பே.

ஜோ பைடனின் வயது, ஆரோக்கியம் தொடர்பாக குடியரசு கட்சியினர் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு ஏற்றாற்போலவே, ட்ரம்ப் உடனான அவரது சமீபத்திய தொலைக்காட்சி விவாதம் அமைந்திருந்தது. விவாத மேடையை நோக்கி மெதுவாக நடந்து சென்ற பைடன், தமது உரையை கம்பீரமாக இன்றி, மெல்லிய குரலில் தொடங்கினார். பொருளாதாரம், வரி வருவாய், வேலைவாய்ப்பு உள்ளிட்ட நாட்டின் முக்கிய விஷயங்கள் குறித்து பேசியபோது, 'பல்லாயிரக்கணக்கான' என்பதற்கு பதிலாக 'ஆயிரக்காணக்கான' என்றும்,' பில்லியன்களை' 'ட்ரில்லியன்கள்ட எனவும் புள்ளிவிவரங்களை மாற்றி பேசி தன் ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய செய்தார். அவரது குழப்பான பேச்சின் உச்சமாக, மூத்த குடிமக்களுக்கான அமெரிக்க அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றி குறிப்பிட்டபோது, "Healthcare" என்ற வார்த்தைக்கு பதிலாக "Medicare" எனக் கூறி, பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் பைடன். அரசின் ஓர் முக்கியமான திட்டத்தின் பெயரையே அதிபர் இப்படி தவறாக சொன்னதுதான் அவரது ஆதரவாளர்களின் அதிர்ச்சிக்கு காரணம்.

ஓங்கி ஒலித்த ட்ரம்ப் குரல்: ஜோ பைடனுக்கு நேர்மாறாக, ட்ரம்ப்பின் குரல், விவாதத்தின் ஆரம்பம் முதலே ஓங்கி ஒலித்தது. கொரோனா பேரிடர் காலத்திலும் தமது தலைமையிலான அப்போதைய அமெரிக்க அரசு நாட்டின் பணவீக்கத்தை எப்படி கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என்பது குறித்தும், வரி குறைப்பு, வேலைவாய்ப்பு பெருக்கம் என தனது ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற சாதனைகள் நிகழ்த்தப்பட்டன என்றும் பெருமிதத்துடன் ட்ரம்ப் எடுத்துரைத்தார். இஸ்ரேல் விவகாரத்தில், ட்ரம்ப் மற்றும் பைடன் தலைமையிலான அரசுகள் ஒரே கொள்கையை கடைபிடித்து வந்தாலும், இதுகுறித்து தமது விவாதத்தில் பைடன் தெளிவாக எடுத்துரைக்கவில்லை. அத்துடன், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக இதில் போதுமான அளவு விவாதிக்கப்படவில்லை.

அமெரிக்க பெண்கள் தொடர்பான முக்கிய சட்டமான கருக்கலைப்பு சட்டம் குறித்த பேச்சு வந்தபோது, தாய்மார்களின் உடல்நலம் தான் முக்கியம் என்று கருக்கலைப்புக்கு எதிராக பைடனும், இல்லை.. இல்லை.. கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் கருவின் ஆரோக்கியமான வளர்ச்சியையும் கருத்தில் கொள்ள வேண்டும் என ட்ரம்ப்பும் வாதிட்டனர்.

பாதுகாப்பு குறித்து ட்ரம்ப் கவலை: அமெரிக்காவின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாகவும், நாட்டில் அதிகரித்துவரும் குற்றங்களுக்கும் சட்டவிரோத குடியேற்றம் முக்கிய காரணமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தமது ஆட்சிக் காலத்தில் வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக தென் அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் நடைபெற்றுவந்த சட்டவிரோத குடியேற்றங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டன. ஆனால் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான முக்கியமான இந்த விஷயத்தில் தற்போதைய அரசு மெத்தப்போக்கை கடைபிடித்து வருவது அச்சத்தை மூட்டுவதாக உள்ளது என்றும் ட்ரம்ப் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். அவரது இந்த குற்றச்சாட்டுக்கும் பைடனிடமிருந்து தெளிவான பதிலோ, வலுவான பதிலடியோ இல்லை.

கட்சிக்குள் ஒலிக்கும் அதிருப்தி குரல்கள்: இவ்வாறு அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, முன்னாள் அதிபரான ட்ரம்புடனான விவாதத்தை பைடன் திறம்பட கையாளவில்லை என ஜனநாயக கட்சி ஆதரவாளர்கள் பரவலாக முணுமுணுக்க தொடங்கியுள்ளனர். ஜோ பைடனின் வயது, ஆரோக்கியம், செயல்திறன் ஆகியவற்றை காரணங்காட்டி, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், ஜோ பைடன் அரசு, சாமானிய அமெரிக்கர்களின் நலன்களுக்காக நிறைய திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. எனவே, இந்தவொரு தொலைக்காட்சி விவாதம், மக்கள் மத்தியில் அவருக்குள்ள செல்வாக்கை சரித்துவிடாது என்பது முன்னாள் அதிப்ர் பராக் ஒபாமா போன்றவர்களின் கருத்தாக இருக்கிறது.

வெற்றியை தீர்மானிக்கும் சக்திகள்: 2024 அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக பைடன் முன்னிறுத்தப்படுவதற்கு அவரது கட்சிக்குள்ளே ஆதரவு, எதிர்ப்பு குரல்கள் ஒலிக்க தொடங்கி உள்ளன. இது ஒருபுறமிருக்க, பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் இனப்படுக்கொலை செய்து வருவதாக கூறியவரும் அமெரிக்காவின் இளம் வாக்காளர்களான கல்லூரி மாணவர்கள், இஸ்ரேலின் இந்த கொலைவெறித் தாக்குதலை அமெரிக்க அரசு ஆதரிப்பதா என்று அவர்கள் பொங்கி எழுந்துள்ளனர். ஜோ பைடனுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடியும் வருகின்றனர். இவர்களது வாக்கும் தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மறைந்த முன்னாள் அதிபர் கென்னடியின் குடும்பத்தைச் சேர்ந்த ராபர்ட் கென்னடி ஜூனியர், அதிபர் தேர்தலில் மூன்றாவது வேட்பாளராக களமிறங்க திட்டமிட்டுள்ளார். தேர்தலில் இவர் போட்டியிட்டால், ஆளும் ஜனநாயகக் கட்சியின் வாக்குகளை அவர் கணிசமாக பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் மத்தியில் ட்ரம்புக்கு பரவலாக ஆதரவு உள்ள நிலையில், அமெரிக்க கருப்பினத்தவர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினரின் ஆதரவு ஜோ பைடனுக்கு உள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணிகள் தேர்தலில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்க உள்ளன.

அதிபர் வேட்பாளர் யார்?: இந்த நிலையில், ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு, ஆகஸ்ட் 19 ஆம் தேதி, சிகாகோவில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் கட்சியின் பிரதிநிதிகள் வாக்களித்து, தங்களது கட்சி.யின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க உள்ளனர். மாறாக, டொனால்ட் ட்ரம்ப், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜுலை இரண்டாவது வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதும் அவர் தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்க உள்ளார்.

இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி. இரண்டாவது விவாத நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று CNN தொலைக்காட்சி அறிவித்துள்ளது. ஆனால், தற்போது நடைபெற்று முடிந்துள்ள முதல் விவாதத்திலேயே பார்வையாளர்கள் மத்தியில் ஜோ பைடன் அம்பலப்பட்டு போய்விட்டதாகவும், டெலிபிராம்டர் முன் அவர் பேசுவதே சரி என்றும் கருதும் அவரது ஆதரவாளர்கள், இரண்டாவது தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற ஜோ பைடனை அனுமதிப்பார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதற்கான விடை இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.

ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதில் இத்தொலைக்காட்சி விவாதம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதும், குறிப்பாக கட்சி சார்பு அல்லாத நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி ஆளுமை செலுத்துகிறது என்பதையும் சமீபத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளின் தரவுகள் காட்டுகின்றன.

(கட்டுரையாளர் - அனுராதா செனாய், இணை பேராசிரியர், ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம்)

இதையும் படிங்க: திபெத் மீதான அமெரிக்காவின் அக்கறை இந்திய - சீன உறவை பாதிக்குமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.