ETV Bharat / opinion

நாடு அங்கீகாரத்தை இழக்கிறதா இஸ்ரேல்? ஐநாவின் அடுத்த நடவடிக்கை என்ன? இந்தியா யார் பக்கம்? - Israel conducts genocide in Gaza

காஸா விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றங்களின் உத்தரவுகளுக்கு செவி சாய்க்காமல் இருக்கும் இஸ்ரேலுக்கு, அதன் 1949ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நாடு அங்கீகார தீர்மானத்தை ரத்து செய்ய ஐநா முடிவு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பேராசிரியர் அனுராதா செனாய் விவரிக்கிறார்.

Etv Bharat
United Nations General Assembly ((File photo: ETV Bharat))
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 4:32 PM IST

ஐதராபாத்: தெற்கு காசாவின் ராபா பகுதியில் மேற்கொண்டு உள்ள ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப் பெறுமாறு இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் கடந்த மே 24ஆம் தேதி அதிரடி உத்தரவிட்டது. இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக மே மாத தொடக்கத்தில் இருந்து ராபா பகுதியில் முற்றுகையிட்டுள்ளன.

கடந்த ஆறு மாதங்களாக காசாவின் வடக்கு பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. முன்னதாக 1948ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுவதாக குற்றம் சாட்டிய தென் ஆப்பிரிக்கா இதுகுறித்து சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது.

தென் ஆப்பிரிக்கா தொடர்ந்த வழக்கின் விளைவுதான் இந்த ராபாவில் இருந்து உடனடியாக இஸ்ரேல் வெளியேற வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டதாக காணப்பட்டாலும், அதை செயல்படுத்த பாதுகாப்பு கவுன்சில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இனப் படுகொலை செய்வது என்பது சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு நாடு செய்யக்கூடிய மிகக் கடுமையான குற்றமாகும். அனைத்து ஆதாரங்களையும் சாட்சியங்களையும் ஆராய்ந்து இறுதி முடிவுகளை எடுக்க நீதிமன்றத்திற்கு பல ஆண்டுகள் தேவைப்படும். ஆனால், பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலை கட்டுப்படுத்த தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சமீபத்திய தற்காலிக நடவடிக்கையில், சர்வதேச நீதிமன்றம் "காசாவில் உள்ள பாலஸ்தீனிய குழுக்கள் மற்றும் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் கொடூர தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், ராபா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனப் படுகொலையை நிறுத்தி உடனடியாக வெளியேற வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை இஸ்ரேல் மீறியதாகவும், அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட 8 லட்சம் பாலஸ்தீனியர்களுக்கு பாதுகாப்பு, போதிய உணவு, மருந்து மற்றும் தங்குமிடம் வழங்கியதாகவும் இஸ்ரேல் கூறியதாக சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐநா சபையின் உண்மை கண்டறியும் பணி, விசாரணை கமிஷன் ஆகியவற்றை அனுமதிக்குமாறு இஸ்ரேலுக்கு சர்வதேச நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹமாஸ் குழுவால் பிடிக்கப்பட்ட இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பணயக் கைதிகள் குறித்து கவலை தெரிவித்த சர்வதேச நீதிமன்றம் அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி ஹமாஸ் பிரிவுக்கு சர்வதேச நீதிமன்றம் வலியுறுத்தியது.

கடந்த ஜனவரி 26ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சர்வதேச நீதிமன்றம் தற்காலிக நடவடிக்கைகளை மீண்டும் உறுதிப்படுத்தியது. மீண்டும் மார்ச் 26ஆம் தேதி நடந்த வழக்கு விசாரணையில் இஸ்ரேலுக்கு நீதிமன்றத்தின் தற்காலிக நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மறுபுறம் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகளை இஸ்ரேல் தொடர்ந்து மீறுவதாகவும் அது வெளிப்படையாகம், தெளிவாக ஐநா சபையை அவமதிக்கும் செயல் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் ஏற்கனவே மற்ற சர்வதேச நீதிமன்றத்தை நிராகரித்துவிட்டது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இது போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமான சட்டத்தை மீறுபவர்கள் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்ட அதிகாரம் உள்ளது.

ஐநா பணியாளர்கள் மற்றும் உரிமைகள் அமைப்புகள் வழங்கிய விரிவான ஆதாரங்களை ஆய்வு செய்த பின்னர், பொது மக்களுக்கு எதிரான குற்றங்களை செய்ததற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை குற்றவாளி என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறிவித்தது. மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant மற்றும் உயர் மட்ட ஹமாஸ் குழு தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்டும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலும் அமெரிக்காவும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அசையும் மனப்பான்மையை கொண்டிருக்கவில்லை என்பது தான் உண்மை.

இஸ்ரேல் அனைத்து சர்வதேச மற்றும் மனிதாபிமான சட்டங்களையும் மீறுவதற்கு தயாராக உள்ளது. ஏனெனில் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளில் இருந்து பெறப்படும் நிபந்தனையற்ற ஆதரவு, அதன் நடத்தையை பொருட்படுத்தாமல் பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் உதவிகளை வழங்குவது முக்கிய காரணம்.

இஸ்ரேலின் நடத்தையை கண்டித்தும், பாலஸ்தீன அரச உரிமையை அங்கீகரித்தும் ஐநாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை இந்தியா உள்பட உலகளாவிய தெற்கு நாடுகள் ஆதரித்துள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாசின் தாக்குதலுக்குப் பிறகு பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 14 ஆயிரம் குழந்தைகள் உள்பட 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா பகுதியில் உள்ள பள்ளிகள், குடியிருப்புகள், மருத்துவமனைகள் மற்றும் பல உள்கட்டமைப்புகள் இஸ்ரேலின் வான்வெளித் தாக்குதல்கள் மற்றும் குண்டு மழையில் சுக்கு நூறாகிப் போயின. பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ராபா போன்ற பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

பாலாஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பாக விசாரிக்க ஐநா மனித உரிமை கவுன்சிலில் நியமிக்கப்பட்ட பிரான்செஸ்கா அல்பானீஸ் தாக்கல் செய்த அறிக்கையில், காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் இனப்படுகொலை என்ற கட்டமைப்பில் நடத்திய தாக்குதல் குறித்து உறுபடுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மேற்கத்திய மற்றும் உலகளாவிய முக்கிய நகரங்களில் இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக மிகப்பெரிய மற்றும் நீடித்த தெருப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. வியட்நாம் போர் போராட்டங்களுக்கு பிறகு இதுவரை கண்டிராத வகையில் இஸ்ரேலுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களை அமெரிக்கா காண்கிறது. முன்னதாக அரபு நாடுகளிலும், தெற்கு நாடுகளிலும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பாலஸ்தீனம் மீதான தாக்குதலை கண்டித்து உலக அளவில் எழுந்துள்ள பொது ஆதரவு, ஐநாவின் பல அமைப்புகள் மற்றும் அவற்றின் அறிக்கைகள், குறிப்பாக சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவுகளால் ஆதரிக்கப்படுவது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் முக்கிய ஊடகங்களை தீவிரமாக கட்டுப்படுத்த முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

அதேநேரம் இஸ்ரேலை ஆதரிப்பதன் மூலம் தங்கள் தரப்பு நியாயக் கதைகளை எடுத்துக் கூற முடியாத சூழலுக்கு தள்ளப்படுவோமோ என்ற நிர்பந்தத்தில் மேற்கு உலக நாடுகளின் தலைவர்கள் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஐநாவின் 193 உறுப்பு நாடுகளில் அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகியவை பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரித்துள்ளன.

இத்தகைய ஆதரவால் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் சற்று பின்னடைவான சூழல் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இனப் படுகொலையைத் தவிர்க்க, போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்த, சுதந்திர பாலஸ்தீனத்தை உறுதிப்படுத்த ஐநா சபையும் உலகப் பெரும்பான்மையும் என்ன செய்ய முடியும் என்றால் இஸ்ரேல் உள்நாட்டு சட்டங்களையும் ஐநா முடிவுகளையும் மீறும் போது அமெரிக்கா எந்தச் செயலையும் வீட்டோ செய்து இஸ்ரேலை தண்டனையில் இருந்து பாதுகாக்க உலக நாடுகள் இனி அனுமதிக்காது என்று தெரிகிறது.

கடந்த 1949ஆம் ஆண்டு ஐநா சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மூலம் இஸ்ரேல் நாடாக அங்கீகரிக்கப்பட்டது. தற்போது நிலவும் அசாதாரண சூழலில் இஸ்ரேலின் நாடு அங்கீகாரத்தை ரத்து செய்ய ஐநாவுக்கு தைரியம் வேண்டும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அதிகாரம் ஐநா சபையிடம் உள்ள நிலையில் தற்போது அவர்களது விருப்பத்தைக் கண்டறிய வேண்டும் என்பது நிதர்சனமான உண்மை.

இதையும் படிங்க: இரண்டு ஜாமீன்களின் கதை... கெஜ்ரிவாலுக்கு கிடைத்தது ஹேமந்த் சோரனுக்கு கிடைக்காமல் போனது எப்படி? - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.