ETV Bharat / opinion

மாநிலங்களவையில் தொடர் அடி... மக்களவையில் சாதிக்குமா காங்கிரஸ்? நிலவரம் கூறுவது என்ன? - Parliament election

மாநிலங்களவை தேர்தலில் பல்வேறு மாநிலங்களில் தொடர் பின்னடைவை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டிய யுக்திகள் குறித்து விரேந்திர கபூர் விவரிக்கிறார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 7:59 PM IST

ஐதராபாத் : தற்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சி மரண படுக்கையில் இருப்பது போல் காணப்படுகிறது. மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுபோட விரும்பினாலும், கட்சி தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் சூழலில் காணப்படுகிறது. சிறிய மாற்றத்தால் கட்சி நெருக்கடிக்கு மேல் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் கூட இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள் எதிர்க்கட்சியினருக்கு வாக்களித்து காங்கிரிசுக்கு அவமானத்தை பெற்றுத் தந்தனர். மாநிலத்தில் பெரும்பான்மையுடன் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்வி, 6 எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததால் தோல்வியை தழுவினார்.

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததால் தேர்தலில் பாஜகவுக்கு கூடுதலாக ஒரு இடம் கிடைத்தது. மேலும் கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சிக்கு, மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 2 இரண்டங்களுக்கு மேல் கைப்பற்றுமா என்ற சந்தேகத்தை கிளப்பி உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் கட்சி மாறி எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பது தொடர்பாக மூத்த தலைவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்த போது, கட்சி மேலிடம் எதுவும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் பதவியேற்க இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆனந்த் சர்மா, மாநிலத்தில் சாராமல் வெளியில் இருந்து ஒருவர் போட்டியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இமாச்சல பிரதேசம் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்குவிற்கும், கட்சியின் நிர்வாகிகளுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படுகிறது. 14 மாதங்களுக்கு முன்னதாக கட்சியின் மேலிடம் முதலமைச்சர் வேட்பாளாராக சுக்விந்தர் சுக்குவை வழிமொழிந்த போதும் கூட குறிப்பிட்ட எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது.

ஆறு முறை முதலமைச்சராக இருந்த விர்பத்ரா சிங்கின் மனைவியும் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பிரதிபா சிங் அல்லது அவரது மகன் விக்ரமாதித்ய சிங் ஆகியோரில் ஒருவரை குறிப்பிட்ட எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் வேட்பாளராக கருதிய போது கட்சி மேலிடம் சுக்விந்தர் சுக்குவிற்கு வாய்ப்பு வழங்கியதால் காட்சியினுள் அதிருப்தி நிலவியதாக சொல்லப்படுகிறது.

மேலும் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதலே காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவருடன் முதலமைச்சர் சுக்விந்தர் சுக்குவிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. அதுவே நாளடைவில் முதலமைச்சருக்கு எதிரான போராட்டமாக வலுப்பெற தூண்டுகோளாய் அமைந்து உள்ளது. உட்கட்சி பூசல் காரணமாக காங்கிரஸ் கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள் எதிரணிக்கு வாக்களித்து உள்ளனர்.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததால் பாஜக வேட்பாள ஹர்ஷ் மகாஜன் மற்றும் அபிஷேக் மனு சிங்வியின் வாக்குகள் 37 என்ற சமனநிலையில் முடிந்தன. இறுதியில் குலுக்கல் முறையில் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றார். மொத்தம் 68 உறுப்பினர்களை கொண்ட இமாச்சல பிரதேச சட்டப் பேரவையில், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 40 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 25 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.

சுயேட்சைகள் 3 பேர் உள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி வாக்களித்தது மற்றும் 3 சுயேட்சைகளின் ஆதரவால் ஹர்ஷ் மகஜனின் வாக்கு எண்ணிக்கை 34 ஆக சமனில் முடிந்தது. மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் செயலால் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்குவின் ஆட்சி விளிம்பில் தள்ளாடிக் கொண்டு இருக்கிறது.

தேர்தலுக்கு மறுநாள் நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 15 பாஜக எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பட்ஜெட் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து அவசர அவசரமாக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே கட்சி மேலிட பொறுப்பாளார்கள் சிம்லா விரைந்து உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நெருக்கடியை குறைத்தனர்.

மேலும், கட்சி மாறி வாக்களித்த 6 எம்.எல்.ஏக்களுக்கு எதிராக சபாநாயகர் தீர்மானம் கொண்டு வந்தார். காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 6 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். தங்கள் மீதான தகுதி நீக்கம் நடவடிக்கைக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு உள்ளனர்.

இதனிடையே அமைச்சர் பதவியை விக்ரமாதித்ய சிங் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் உயர் மட்ட குழு உறுப்பினர்கள் பூபேந்தர் சிங் ஹூடா, பூபேஷ் பாகெல், டி.கே. சிவக்குமார் தலைமையில் சிம்லாவில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் விக்ரமாதித்ய சிங் தனது முடிவில் இருந்து பின்வாங்கி ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற்றார்.

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்காது எனக் கூறப்படுகிறது. சுக்விந்த சுக்கு தலைமையிலான ஆட்சி சீர்குலைக்க பாஜக முயற்சித்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்து உள்ளனர். நாடு முழுவதும் நிலவும் மோடி என்கிற பிம்பத்திற்கு மத்தியில் ஏப்ரல் அல்லது மே மாத நடைபெற திட்டமிடப்பட்டு உள்ள மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள 4 இடங்களில் காங்கிரஸ் ஒரு இடத்தையாவது கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், உத்தர பிரதேசத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் களமிறங்கவில்லை என்றாலும், சமாஜ்வாதி கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு, மக்களவை தேர்தலில் அக்கட்சியின் வாய்ப்பை மோசமாக பாதிக்கும். சமாஜ்வாதி கட்சியின் உடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்து கொண்ட காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிட உள்ளது.

அதேநேரம், சமாஜ்வாதி கட்சி 63 இடங்களில் போட்டியிடுகிறது, அண்மையில் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர்கள் ஏழு பேர் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்தது, மக்களவை தேர்தலில் அக்கட்சியின் நிலைமையை மேலும் பலவீனப்படுத்தும். மேலும், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள், குறிப்பாக காந்தி குடும்பத்தின் கோட்டைகளான அமேதி மற்றும் ரேபரலி தொகுதியில் சமாஜ்வாதி கிளர்ச்சி எம்.எல்.ஏக்களின் கட்டுப்பாட்டில் இருப்பது அங்கும் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் சூழல் நிலவுகிறது.

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் பிரிதிஷ்டா விழாவில் கலந்து கொள்ள விடாமல் தங்களின் தனிப்பட்ட நிலையில் கூட அகிலேஷ் யாதவ் தடுத்ததாக அவர் மீது புகார் எழுந்து உள்ளது. அயோத்தி விழாவில் கலந்து கொள்வது, தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தடையாக அமையும் என்றும் பெரிய இஸ்லாமிய வாக்கு வங்கிக்கு விரோதமாகிவிடுமோ என்ற அச்சத்தில் அகிலேஷ் யாதவ் புறக்கணித்தார்.

அதேநேரம் அயோத்தி கோயிலின் பிரம்மாண்ட திறப்பு விழாவில் கலந்து கொள்ள தவறியதற்காக சமாஜ்வாதி கட்சியை வலுவாக ஆதரிக்கும் சொந்த சமூக மக்களே அகிலேஷ் யாதவ் மீது கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்டுள்ள பதற்றம் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக இல்லை.

தேர்தலுக்கு முன்பாக சமாஜ்வாதி கட்சி மேலும் வலுவிழந்தால், அதன் கூட்டணியில் உள்ள காங்கிரசுடனான தொகுதி் பங்கீட்டில் பின்னடைவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மேலும், காந்தி குடும்பத்தின் கோட்டையாக காணப்படும் அமேதி மற்றும் ரேபரலி தொகுதியில் போட்டியிட விரும்பினால், சமாஜ்வாதி கட்சியின் ஆதரவு என்பது காங்கிரஸ் கட்சிக்கும் முக்கியமானதாகும்.

ஆனால் சமாஜ்வாதி கிளர்ச்சி எம்.எல்.ஏக்கள் வசம் உள்ள இந்த இரண்டு தொகுதிகளிலும் எதிர்ப்பு அரசியல் பரவவிடப்பட்டால் காந்தி குடும்பத்தின் கோட்டையாக காணப்படும் இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படக் கூடும். தற்போது ராகுல் காந்தி வசம் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதிக்கு கேரளாவில் இடது முன்னணி உரிமை கோரியும், சோனியா காந்தி மாநிலங்களவையில் இருந்து மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்வாகி உள்ளார்.

அமேதி மற்றும் ரேபரலியில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் காரணமாக மக்களவை தேர்தலில் தெலங்கானா பக்கம் ராகுல் காந்தியின் பார்வை திரும்பி உள்ளது. காங்கிரஸ் மேலிடமே மக்களவை தேர்தலில் போட்டியிட தொகுதிகளை ஆராய்ந்து கொண்டு இருப்பதால் எதிர்க்கட்சியின் பலம் வலிவிழந்து காணப்படுகிறது. தனது 2.0 யாத்திரையில் ஈடுபட்டு உள்ள ராகுல் காந்தி மக்களவை தேர்தல் தொடர்பான யுக்திகளை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : குறைந்த அளவிலான காற்று மாசுவை சுவாசித்தாலும் மாரடைப்புக்கு வழிவகுக்குமா? நிபுணர் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.