ஐதராபாத் : நாட்டில் கார்பன் உமிழ்வால் ஏற்படும் சுற்றுச்சூழல் சுமைக்கு சரக்கு லாரிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. சரக்கு லாரிகள் மூலம் நேரடியாக 41 சதவீதமும், குறிப்பிட்ட கார்பன் உமிழ்வுகள் மூலம் 53 சதவீதமும் உமிழ்வு என்பது இருப்பதாக கூறப்படுகிறது. பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் இரண்டையும் உள்ளடக்கிய மொத்த வாகனக் குறியீட்டில் 3 சதவீதத்திற்கும் குறைவான தாக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
வாகனத்தின் எடை, சரக்குகளை கையாளுதல் மற்றும் பல்வேறு நிலப் பரப்பிற்கு ஏற்ற வகையில் வாகனத்தின் இயக்கும் ஆகியவற்றின் அடிப்படையில் கார்பன் உமிழ்வில் டிரக்குகளின் பங்கை வகைப்படுத்தலாம், லைட்-டூட்டி டிரக்குகள் குறைந்தபட்சம் 3.5 டன்கள், நடுத்தர டிரக்குகள் 3.5 முதல் 12 டன்கள் எடையிலானது.
கடைசியாக கனரக டிரக்குகள் 12 டன்களுக்கும் அதிகமான எடைகளை கையாளுதல், சாலை சரக்கு போக்குவரத்து துறையில் அதன் முக்கிய பங்கு இருந்த போதிலும், சுமார் 70.5 மில்லியன் டன் எரிபொருள் எடுத்துக் கொள்வதால், ஆண்டுதோறும் 213 மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வு வெளியாகிறது.
டிரக்குகள் முக்கியமாக டீசல் எரிபொருளால் இயங்கக் கூடியவை அதேநேரம் இந்திய சாலைகளில் உள்ள மின்சார சரக்கு வாகனங்களில் எண்ணிக்கை என்பது 1 சதவீதத்திற்கும் குறைவானது தான். சாலை போக்குவரத்தின் மூலம் சரக்குகளை கையாள்வதில், டிரக்குகள், லாரி மற்றும் கனரக வாகனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
இந்தியாவின் உள்நாட்டு சரக்கு தேவையில் 70 சதவீதத்தை டிரக்குகள் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன. இதில் கனரக மற்றும் நடுத்தர டிரக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த 2022 ஆம் ஆண்டில் 4 மில்லியனாக இருந்த டிரக்குகளின் எண்ணிக்கை 2050க்குள் 17 மில்லியனாக நான்கு மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 14 சதவீதமாக உள்ள இந்தியாவில் தளவாடங்களின் விலை, சக நாடுகளுடன் (8%-11%) ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது. சரக்கு போக்குவரத்து துறையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீத பங்களிப்பு மற்றும் 2 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் வேலைவாய்ப்பு என இன்றியமையாத பங்கை அளித்து வரும் டிரக் மற்றும் கனரக வாகனங்களின் சுற்றுச்சூழல் தாக்கத்தை நிவர்த்தி செய்வது மிக எளிதானது அல்ல.
இருப்பினும், இந்தியாவில் சரக்கு வாகனங்களை மின்மயமாக்கும் முயற்சியில் கடுமையான தடைகள் உள்ளன. நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள், அவற்றின் கணிசமான சுமை திறனை கையாள அதிக சக்தி தேவைப்படுகிறது. இதன் விளைவாக மின் டிரக்கின் விலை வழக்கமான டீசல் டிரக்கை விட தோராயமாக 3 முதல் 4 மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.
இந்தியாவில் டிரக் மற்றும் கனரக வாகனங்களின் சந்தை, பல சிறிய ஆபரேட்டர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. சுமார் 5 டிரக்குகள் இந்திய சந்தையின் 75 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை கட்டுப்படுத்துகிறது. மேலும், பூஜ்ஜிய உமிழ்வு டிரக்குகளை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள் இரண்டையும் வழங்குகிறது.
மின்சார டிரக்குகளை நோக்கி மாறுவது என்பது தொழில்துறை மற்றும் நுகர்வோர் மத்தியில் ஒரு முன்னுதாரண மாற்றமாக காணப்படுகிறது. இந்தியாவில் பூஜ்ஜிய உமிழ்வு டிரக்குகளின் விற்பனையை ஊக்குவிப்பது என்பது கூட்டு அணுகுமுறையை எதிர்நோக்குகிறது. திறன் மேம்பாடு மற்றும் உற்பத்தி செயல்முறைகள் முதல் பேட்டரி கையாளுதல், விரிவான ஓட்டுநர் பயிற்சி வரை பல்வேறு அம்சங்களை இந்த மின்சார டிரக்குகள் உள்ளடக்கியதாக உள்ளது.
சரக்கு போக்குவரத்தில் மிகவும் நிலையான எதிர்காலத்திற்கு வழி வகுக்க, விழிப்புணர்வை மேம்படுத்துவது, நிதி அணுகலை மேம்படுத்துவது மற்றும் மின்சார வாகனங்களின் ஆரம்ப மூலதனச் செலவைக் குறைப்பது மிகவும் முக்கியமானது. சரக்கு கையாளுவதின் நேர உணர்திறன் தன்மையை கருத்தில் கொண்டு, மின்சார வாகனங்களுக்கான வணிக பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு அதிநவீன மற்றும் அதிவேக சார்ஜிங் பாயிண்ட் கட்டுமானம் என்பது முக்கியத்தக்க ஒன்றாக உள்ளது.
மேலும் மின்சார வாகனங்கள் மீதான பிம்பத்தை உடைத்து எளிதில் கையாளக் கூடிய வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் முதலீடு பிரச்சினைகளை குறைக்க வேண்டும். மேலும் பொது ஆதரவு கடன், வட்டி மானியத் திட்டங்கள் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதன் மூலம் மின் வாகனங்களின் மீதான பார்வை என்பது திரும்பக் கூடும்.
2024 ஆம் ஆண்டில் மின்சார டிரக் விற்பனை இலக்கு 6 சதவீதத்தில் இருந்து 2035 ஆம் ஆண்டிற்குள் 63 சதவீதமாக அதிகரிக்கவும், 2047ஆம் ஆண்டுக்கு அதை 100 சதவீதமாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தற்போது, இந்தியாவின் 50 சதவீத சரக்கு போக்குவரத்து டெல்லி, மும்பை, சென்னை, காண்டலா (குஜராத்), கொச்சி மற்றும் கொல்கத்தாவை இணைக்கும் ஏழு முக்கிய வழித்தடங்களில் நடக்கிறது.
மின்சார டிரக்குகளை சரக்கு போக்குவரத்தில் புகுத்துவதன் மூலம் இந்த வழித்தடங்களில் சார்ஜிங் பாயிண்ட் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும், போக்குவரத்து செலவுகள், ஒட்டுமொத்த தளவாடச் செலவுகளில் 62 சதவீதம் மற்றும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீதம் என மின் வாகனங்களின் பங்களிப்பால் கணிசமான செலவுகளை குறைக்க முடியும்.
மேலும், டீசல் எரிபொருள் செலவுகள் போக்குவரத்துச் செலவுகளில் பெரும்பகுதியைக் கணக்கிடுகின்றன. மின்சார வகனங்களால் ஒரு வாகனம் தனது வாழ்நாளில் எடுத்துக் கொள்ளும் எரிபொருள் செலவில் 46 சதவீதம் வரை குறைப்பதற்கு வழிவகுக்கும். இது இந்திய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நிதி ஆயோக்கின் அறிக்கையின் படி மின்சார வாகனங்கள் உட்பட அடுத்த கட்ட தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதன் மூலம் சாத்தியமான பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளை அடைய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்தகைய தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதன் மூலம் இந்தியாவின் தளவாடச் செலவுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதம் வரை குறைக்கலாம் மற்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் 10 ஜிகா டன்கள் கார்பன் உமிழ்வை குறைக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பூஜ்ஜிய உமிழ்வு டிரக்குகள் மூலம் இந்தியா சரக்கு வாகன போக்குவரத்து தொழில்துறையின் மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார செயல்திறனை அடைவதற்கான அடுத்த கட்ட படியை எட்ட முடியும். அதேநேரம் மின் வாகனங்களை ஊக்குவிக்கும் வகையிலாக கொள்கை ரீதியிலான முடிவுகளை மத்திய மற்றும் மாநில அரசுகளும் முன்மொழிய வேண்டும் என்பது தான் நிதர்சனமான உண்மை.
இதையும் படிங்க: 2030க்குள் 7 டிரில்லியன் பொருளாதாரம் சாத்தியமா? இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?