ஐதராபாத்: அண்மைக்காலமாக புற்றுநோய் பாதிப்பு என்பது அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக 50 வயதுக்கு உட்பட்டவர்களிடமே அதிகளவில் புற்றுநோய் என்பது காணப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் முயற்சியில் உலகளாவிய ஆய்வாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதேநேரம் இதில் ஆறுதல் அளிக்கும் ஒரே தகவல் என்னவென்றால் எந்த அளவுக்கு புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறதோ அந்தளவுக்கு இறப்பு விகிதம் குறைந்து வருவது தான். புற்றுநோய் பாதிப்புக்கான வயது அடிப்படையை பொறுத்தவரை பொதுவாக 55 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் எனக் கருதப்படுகிறது.
கால மாற்றத்திற்கு ஏற்ப புற்றுநோய் பாதிப்பு கண்டறிதல் எண்ணிக்கையும் பெரிய அளவில் அதிகரித்து உள்ளது. ஆய்வாளர்களின் கருத்துப்படி தைராய்டு, கணையம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை பாதிக்கக் கூடிய வகையிலான புற்றுநோய் பாதிப்புக்குள்ளாவர்களில் இளம் தலைமுறையினரின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
பிரிட்டனின் வருங்கால ராணியும், வேல்ஸ் இளவரசியுமான கேட் மிடில்டன் தனது 42வது வயதில் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தெரிவித்ததை அடுத்து 40 மற்றும் 50 வயது உட்பட்டவர்களிடையே புற்றுநோயின் மீதான கவனம் என்பது அதிகரித்து உள்ளது. அதேபோல் நடிகை ஒலிவியா முன், மார்பக அழற்சிக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தெரிவித்தது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை புற்றுநோய் மீதான பொது மக்களின் பார்வை எந்தளவுக்கு மாறி உள்ளது என்பதை கூறலாம்.
அதேபோல் ஹாலிவுட் முதல் பாலிவுட் வரையிலான பல்வேறு சினிமா பிரபலங்களின் புற்றோய் மரணம், நோயின் மீதான தீவிரத்தன்மையயை பொது மக்களிடையே எடுத்து காட்டி உள்ளது. குறிப்பாக மார்வெல் சூப்பர் ஹீரோ சாட்விக் போஸ்மேன், பாலிவுட் நடிகர் இர்பான் கான் ஆகியோரின் மரணங்கள் அடங்கும்.
கடந்த 1990 ஆம் ஆண்டிற்கு பின் ஆரம்ப கால புற்றுநோய் பாதிப்புகளான மார்பகம், பெருங்குடல், உணவுக்குழாய், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் கணையம் ஆகிய உடல்உறுப்பு சார்ந்த புற்றுநோய்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து உள்ளதாக கடந்த 2022ஆம் ஆண்டு ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்து உள்ளது.
50 வயதிற்குட்பட்டவர்கள் ஏன் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கண்டறிவது தொடர்பான ஆய்வறிக்கை நேச்சர் ரிவியூஸ் கிளினிக்கல் புற்றுநோயியல் என்ற இதழில் வெளியிடப்பட்டது. பிறப்பு கூட்டு விளைவு என்பதன் மூலம் குறிப்பிட்ட தலைமுறையினரை தாண்டி அடுத்த தலைமுறையினருக்கு முன்கூட்டியே புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
உதாரணமாக, 1960 ஆம் ஆண்டு பிறந்தவர்கள் 1950இல் பிறந்தவர்களை விட 50 வயதிற்கு முன்பே அதிக புற்றுநோய் அபாயத்தை எதிர்கொள்ளக் கூடும் எனக் கூறப்படுகிறது. குறைந்தது 14 வகையான புற்றுநோய்கள் 50 வயதிற்கு முன்னரே பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
தனிப்பட்ட ஒரு நபரின் உணவு, வாழ்க்கை முறை, எடை, சுற்றுச்சூழல் மற்றும் நுண்ணுயிரிகளில் ஏற்படும் மாற்றமான ஆரம்பகால வாழ்க்கை வெளிப்படைத் தன்மை உள்ளிட்டவைகளை கொண்டு அதன் தீவிரத்தன்மையில் மாற்றம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இளம் தலைமுறையினர் பெரிய அளவில் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மார்பக புற்றுநோய் அல்லது தைராய்டு புற்றுநோயை போன்ற சில புற்றுநோய்கள் 40 மற்றும் 50 வயதுடைய இளைஞர்கள், இளம் பெண்களிடம் அதிகமாகவோ என்று இந்தியாவின் முன்னணி புற்றுநோயியல் நிபுணர்களில் ஒருவரான மருத்துவர் சமீர் கவுல் கூறி உள்ளார். மரபணுக்கள் மற்றும் வெளிப்புற சூழலில் ஏற்படும் மாற்றங்கள், நாம் உட்கொள்ளும் உணவு, சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசு மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை போன்ற காரணிகள் தான் இதற்கு காரணம் என்றும் மருத்துவர் சமீர் கவுல் தெரிவித்து உள்ளார்.
மது அருந்துதல், தூக்கமின்மை, புகைபிடித்தல், உடல் பருமன், நீரிழிவு மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை போன்ற பிற காரணிகளும் புற்றுநோய் பாதிப்புகளுக்கான அறிகுறிகளாக உள்ளதாக மருத்துவர் சமீர் கவுல் கூறுகிறார். உலகம் முழுவதும் உள்ள புள்ளி விவரங்களில் 50 வயதிற்குட்பட்டவர்களிடையே புற்றுநோய் பாதிப்பு என்பது அதிகரித்து காணப்படுவதாக கூறப்படுகிறது.
அதேபோல், உலகளாவிய தரவுகளின் அடிப்படையில், 2019 மற்றும் 2030க்கு இடைப்பட்ட காலத்தில் ஆரம்பகால புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை சுமார் 30 சதவீதம் வரை அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் 50 வயதிற்குட்பட்ட ஆண்களிடையே புற்றுநோய் இறப்புக்கான முக்கிய காரணமாக விளங்கும் பெருங்குடல் புற்றுநோய், பொதுவாக 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களைத் தாக்கிய புற்றுநோய் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு வாழ்வியல் மாற்றங்களின் அடிப்படையில் இந்த வயது வித்தியாசம் என்பது நாளடைவில் குறைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இளம் பெண்களை எடுத்துக் கொள்கையில் புற்றுநோய் பாதிப்பால உயிரிழப்பவர்களின் சராசரியில் பெருங்குடல் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதேநேரம் 50 வயதிற்குட்பட்டவர்களிடையே புற்றுநோய் பாதிப்பு அதிகரித்தாலும், குறிப்பாக பெண்களிடையே, இறப்பு விகிதம் குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை அங்கு புற்றுநோய் பாதிப்பு என்பது மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் பெரிய அளவில் மாற்றம் என்பது காணப்படும்.
கடந்த 1990 நடுப்பகுதியில் இருந்து அமெரிக்காவில் கருப்பை புற்றுநோய்க்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 2 சதவீதம் வரை அதிகரித்து காணப்படுகிறது. அதேபோல் 2016 மற்றும் 2019 ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் மார்பக புற்றுநோய் 3 புள்ளி 8 சதவீதம் வரை அதிகரித்து உள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி இதழான நேச்சரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் இளம் தலைமுறையினரிடையே காணப்படும் புற்றுநோய் விகிதமானது வயதுக்கு வந்த பெண் அல்லது ஆண்களிடையே இருப்பதை விட அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மனித உடலில் வாழும் நுண்ணுயிரிகளின் மாற்றமும் புற்றுநோய் பரவலுக்கான காரணமா என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
உணவு பழக்க வழக்க மாற்றங்கள் அல்லது நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற நுண்ணுயிர் கலவையில் ஏற்படும் இடையூறுகள் போன்றவை புற்றுநோய் பாதிப்புக்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என நேச்சார் இதழில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாளுக்கு நாள் புற்றுநோய் பாதிப்பு என்பது அதிகரித்து காணப்பட்டாலும் அதிகரிப்புக்கான காரணம் என்னவென்றால் கேள்விக் குறிதான்.
மற்ற எல்லா நோய்களையும் போலவே ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரியான உணவு மற்றும் உடல் உழைப்பு, ஓய்வெடுக்க போதுமான தூக்கம் ஆகியவற்றை கொண்டு புற்றுநோய் பாதிப்பை தவிர்க்க முடியும் என நேச்சர் இதழில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புற்றுநோய் தடுப்பு என்பது சாத்தியமான ஒன்றே :
கடந்த 2022ஆம் ஆண்டு ஏறத்தாழ 19 புள்ளி 3 மில்லியன் புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், அதில் 10 மில்லியன் உயிரிழப்புகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலகளவில் உயிரிழப்புக்கான நோய் பாதிப்புகளில் புற்றுநோய் இரண்டாவது முக்கிய காரணமாக உள்ளது. புற்றுநோயின் உலகளாவிய பாதிப்பு மற்றும் இறப்பு விகிதங்கள் 2040 ஆண்டுக்குள் 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
முதல் நிலை: சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியத்தின் அறிக்கை படி, உலகளவில் உள்ள புற்றுநோய்களில் பாதி குணப்படுத்தக் கூடியவை. புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளில், புகையிலை, மது அருந்துதல், கதிர்வீச்சு, அதிக எடை மற்றும் உடல் பருமன் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களை சரியான முறையில் கடைபிடிக்கும் பட்சத்தில் புற்றுநோயை அதன் ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க முடியும்.
இரண்டாம் நிலை: புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளில் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல் மற்றும் தீவிரமடையாமல் தடுப்பது தொடர்பானது. புற்றுநோயை அதன் வளர்ச்சியின் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கக்கூடிய ஸ்கிரீனிங் சோதனைகள் இதில் அடங்கும்.
ஒரு சில புற்றுநோய்களுக்கு குறிப்பாக மார்பக, கருப்பை வாய், நுரையீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களை பரிசோதனைகள் மூலம் முன்கூட்டியே கண்டறிவது நடைமுறையில் இருந்தாலும், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை நிலைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளும் மருந்துவ முறை என்பது முக்கியமானதாகும்.
இதையும் படிங்க : இந்தியா - EFTA வர்த்தக ஒப்பந்தத்தால் என்ன பயன்? உலகின் பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறுமா? நிபுணர் கூறுவது என்ன? - India Sign Trade Deal With EFTA