ஐதராபாத்: இந்திய சென்செக்ஸ் வரலாறு காணாத வகையில் புது உச்சம் தொட்டு வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 61 ஆயிரத்து 112.44 புள்ளிகளாக இருந்த சென்செக்ஸ் கடந்த ஏப்ரல் 2024ஆம் ஆண்டுடன் 22 சதவீதம் உயர்ந்து 74 ஆயிரத்து 482.78 புள்ளிகளாக அதிகரித்து உள்ளது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதாத்திற்கான உலக பொருளாதார கணிப்புகளின் படி 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில், உலகின் பிற நாடுகளில் உள்ள மோசமான வளர்ச்சி விகிதங்களுக்கு மத்தியில், இந்தியாவின் மீளும் திறன்தன்மையை சுட்டிக் காட்டுகிறது. 2024ஆம் ஆண்டுக்கான நிகர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 சதவீதம் வளர்ச்சி விகிதத்தை அடையும் நோக்கில் இந்தியா பயணித்து வருகிறது.
அதேநேரம் 2025ஆம் ஆண்டு நிகர மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5 சதவீதம் என்ற அளவாக குறையும் என கணிக்கப்பட்டு உள்ளது. சீனா உள்பட பல்வேறு உலக நாடுகளில் ஏற்பட உள்ளதாக கணிக்கப்பட்டுள்ள பொருளாதார சுணக்கமே இதற்கான காரணமாக இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
எப்படி இருந்தாலும் நடப்பு நிதி ஆண்டிலும், அடுத்த நிதி ஆண்டிலும் இந்திய பொருளாதாரம் திட்டமிட்ட வளர்ச்சி விகிதங்களை தக்கவைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நுகர்வோர் நம்பிக்கை மற்றும் இந்திய நுகர்வோரின் உணர்வுகளை வலுப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை உயர்த்த தேவையான கவனம் செலுத்தப்படாததே இதற்கு காரணமாக கருதப்படுகிறது.
பொது பொருளாதார நிலை, வேலை வாய்ப்பு சூழ்நிலை, ஒட்டுமொத்த விலை நிலை, சொந்த வருமானம் மற்றும் செலவு ஆகியவை நுகர்வோர் நம்பிக்கையின் குறியீடுகளாலும். இந்த குறியீடுகள் குடும்பங்களின் நுகர்வு மற்றும் சேமிப்பு தொடர்பான எதிர்கால முன்னேற்றங்கள் குறித்து கொள்கைகளை வகுக்க தரவுகளை வழங்குகின்றன.
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் நுகர்வு கலாசாரத்தில் சேமிப்பதை விட செலவழிக்கும் மானப்பான்மை அதிகரிப்பதாகவும், அதேநேரம் அவநம்பிக்கை குறித்த எண்ணங்கள் தலைத் தோங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 2 முதல் 11ஆம் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வில் ஏறத்தாழ 6 ஆயிரத்து 83 பேர் பங்கு பெற்றதாகவும், 19 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் குறிப்பிட்டு கூறும் வகையில் 50.8 சதவீதம் பெண்கள் இந்த ஆய்வுக்கான தகவலை வழங்கி உள்ளனர்.
பொருளாதாரத்தின் எதிர்கால நிலை குறித்த முக்கிய அம்சங்கள் தொடர்பாக கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போதைய சூழ்நிலையில் நுகர்வோரின் நம்பிக்கை மேம்பட்டுள்ளது மற்றும் 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் காட்டிலும் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. கடந்த மே 2021 ஆம் அண்டு குறியீடு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக 48.5ஆக குறைந்த நிலையில், தற்போது 98.5 ஆக நிலை பெற்றுள்ளது.
இருப்பினும் பொருளாதாரத்தின் மீதான அவநம்பிக்கை உணர்வுகளை தூண்டும் வரம்பு எண்ணிக்கையை விட குறைவாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. எதிர்கால எதிர்பார்ப்புகள் குறியீடு 125.2 இல் நிலவும் நிலையில் 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கு பின்னர் மீண்டும் உயர்ந்த நிலையில், வரும் ஆண்டில் பொருளாதாரத்தின் மீதான நுகர்வோர் நம்பிக்கை அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.
2023 மார்ச் முதல் 2024 ஜனவரி வரை எதிர்மறையாக இருந்த தற்போதைய பொருளாதார நிலை குறித்த கருத்துக்கள் 2024 மார்ச் மாதம் நேர்மறையானதாக மாறியது. வேலை வாய்ப்பு தொடர்பான கருத்துக்கள் 2023 மார்ச் முதல் 2024 ஜனவரி வரை எதிர்மறையாக இருந்த நிலையில் நடப்பாண்டு மார்ச் மாதத்தில் நடுநிலையை கண்டுள்ளது.
2024 மார்ச் மாதத்தில் விலை நிலை மற்றும் பணவீக்கம் தொடர்ந்து எதிர்மறையாகவே இருந்தன, இருப்பினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் எதிர்மறை உணர்வுகளின் அளவு மேம்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் செலவினங்களை பற்றிய கருத்துக்கள் நேர்மறையாக காணப்பட்டாலும் 2023 நவம்பர் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் நிலையான மட்டத்தை கொண்டிருந்தன.
அத்தியாவசிய பொருட்களுக்கு செலவழிப்பதற்கான நுகர்வோர் நம்பிக்கை அதிகரித்து உள்ள அதே சமயத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கான செலவுகள் குறித்தும் அவநம்பிக்கையற்ற சூழல் பொது மக்களிடையே நிலவுகிறது. இந்த தரவுகள் வருமான ஆதாரங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளன.
கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை வழங்குவது கடந்த 2022-23 நிதி ஆண்டில் குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-2023 நிதி ஆண்டில் மாகத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கீழ் சராசரி வேலைநாட்கள் 47.84 சதவீதம் குறைந்துள்ளது.
இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிலான வீழ்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாபார நம்பிக்கை தொடர்பான வருமான தரவுகள் குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் வாங்கும் திறன் குறியீடு இதுவரை இல்லாத அளவாக 58.8ஆக அதிகரித்து உள்ளது.
அதேநேரம் ஏப்ரல் மாதத்திற்கான வாங்கும் திறன் குறியீடு மதிப்பு, முந்தைய மாத எண்ணிக்கையான 59.1ஐ விடக் குறைவாக இருந்தாலும், வலுவான தேவை நிலை காரணமாக வணிக உணர்வுகள் வலுப்பெறுவதை குறிக்கிறது. மேலும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்து இருப்பதை சுட்டிக் காட்டுகிறது.
இந்தியா பெரும்பாலும் நுகர்வு சார்ந்த பொருளாதாரத்தையே நம்பி இருக்கிறது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதம் நுகர்வு மூலம் பெறப்படுகிறது. நுகர்வோர் செலவு செய்யும் திறன் மற்றும் வருமானத்தை பொறுத்து நுகர்வு அறியப்படுகிறது. இருப்பினும், நுகர்வோர் நம்பிக்கையை சார்ந்தும் இது தனது இயக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதேநேரம் அசாதாரணமான சூழலில் நுகர்வு வீழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய காரணியாகவும் இது மாறக் கூடும் மற்றும் பொருளாதார சுணக்கம் காரணமாக ஏற்படும் மந்தநிலையை அதிகரிக்கவும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. எனவே, அரசின் கொள்கை வகுப்பாளர்கள் விழிப்புடன் இருந்து நுகர்வோர் நம்பிக்கை அளவீடுகள் மற்றும் அவர்களது பொருளாதார மதிப்பீடுகள் ஏற்ப ஒருங்கிணைந்ததாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: வெங்காய ஏற்றுமதி தடைக்கான நீக்கம்! கதறும் நேபாளம், ஆனந்த கண்ணீரில் வங்கதேசம்! என்ன காரணம்? - India Lift Onion Export Ban