ஐதராபாத் : இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி இந்தியா-மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான பொருளாதார வழித்தடம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. வரலாற்று சிறப்புமிக்க இந்த ஒப்பந்தத்தின் மூலம் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான நூற்றாண்டு சிறப்பு மிக்க இந்திய துணைக் கண்டத்துடனான வர்த்த வழித்தடம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இஸ்ரேல் - காசா இடையிலான பிரச்சினைகள் காரணமாக செங்கடல் பகுதியில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பொருளாதார வழித்தடத்தை உருவாக்கும் இந்திய பிரதமர் மோடி - ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் ஆகியோரின் திட்டத்தால் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளவும், செங்கடல் பகுதியில் ஏற்படும் கப்பல் போக்குவரத்து தடை, விலைவாசி உயர்வு, எரிபொருள் பயன்பாடு, காரியமில உமிழ்வு குறைப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குதல் உள்ளிட்ட பொருளாதார மற்றும் எதிர்கால திட்டங்களை மாற்றி அமைக்கக் கூடியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியா - மத்திய கிழக்கு- ஐரோப்பிய பொருளாதார வழித்தடத்தை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
உலக மக்கள் தொகையில் 40 சதவீதமும், உலக பொருளாதாரத்தில் 50 சதவீதத்தையும் கொண்டு உள்ள இந்த நாடுகள் ஐக்கிய அரபு அமீரகம், சவதி அரேபியா, கிரீஸ் ஆகியா நாடுகள் வழியாக இந்தியாவையும், ஐரோப்பாவையும் இணைக்க திட்டமிட்டு உள்ளன. இந்த திட்டத்தில் இஸ்ரேல், ஜோர்டான் ஆகிய நாடுகளை இணைக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ள போதும் அவை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வில்லை.
இந்தியா - ஐரோப்பா இடையிலான தற்போதைய வர்த்தக போக்குவரத்து எகிப்து கட்டுபாட்டில் உள்ள சுயஸ் கால்வாயின் கடல்வழி சார்ந்ததாக உள்ளது. அதேநேரம் இந்தியா- மத்திய- கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான பொருளாதார வழித்தடத்தின் மூலம் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகத்தின் மேற்கு கடல் வழியாக 4 ஆயிரத்து 800 கிலோ மீட்டர் நீண்ட தூர போக்குவரத்து வழித்தடம் இணைக்கிறது.
மேலும் அரேபிய தீபகற்பத்தைக் கடந்து இஸ்ரேலிய ஹைபா துறைமுகத்திற்கு ரயில் பாதையை இந்த திட்டம் மூலம் இணைக்கப்பட உள்ளது. ஹைபாவில் இருந்து சரக்குகள் மீண்டும் கடல் வழியாக கிரீக் துறைமுகமான பைரேஸ் மூலம் ஐரோப்பாவை சென்றடையும். இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் முந்தரா, கண்ட்லா, மும்பை உள்ளிட்ட துறைமுகங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள புஜைரா, ஜெபல் அலி மற்றும் அபுதாபி, சவுதி அரேபியாவின் தம்மாம் மற்றும் ராஸ் அல் கைர் துறைமுகங்கள், இஸ்ரேலில் ஹைபா மற்றும் பிரான்சில் உள்ள மார்சேய் துறைமுகங்கள், இத்தாலியில் மெசினா மற்றும் கிரீஸில் உள்ள பைரேயஸ் ஆகிய துறைமுகங்களுடன் இணைக்கப்படும்.
இந்தியா- மத்திய- கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வழித்தடம் திட்டத்தின் மூலம் மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை எளிதில் அணுக இந்தியாவுக்கு உதவியாக இருக்கும். இதற்கு முன் இந்த திட்டம் ஈரான் மற்றும் மேற்கு ஆசியாவில் பாகிஸ்தானினுடான இடப் பகிர்வு தகாராறு காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த பொருளாதார வழித்தடத்திற்கு ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் இஸ்லாமாபாத் மற்றும் தெஹ்ரான் வழியாக மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளை எளிதில் அணுகும் வழியை இந்தியா கண்டுபிடிக்க உதவியாக இருந்திருக்கும். பொருளாதார அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஜோர்டான், இஸ்ரேல, கிரீஸ் மற்றும் இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி என்பது எளிதான காரணமாக அமையும்.
மேலும், ஐரோப்பா - இந்தியா இடையிலான சரக்கு போக்குவரத்திற்காக செலவிடப்படும் நேரம் மற்றும் பணம் என்பது 30 முதல் 40 சதவீதம் வரை குறையும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து பொறியியல் சார்ந்த உபகரணங்கள் ஏற்றுமதி என்பது அதிகளவில் காணப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் பொறியியல் உபகரணங்களின் ஏற்றுமதியை வெகுவாக ஊக்குவிக்கும் வகையில் அமையும் எனக் கூறப்பட்டு உள்ளது.
அதேபோல் ஐடி துறையிலும் இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பிய நாடுகளுடனான உறவு வலுப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது. அதேநேரம் இந்தியா- மத்திய- கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வழித்தடத்தின் மூலம் உலக பொருளாதாரம் மற்றும் சர்வதேச அரசியல் களம் ஆட்டம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பங்கேற்கும் நாடுகள் இதற்கான நிதி சார்ந்த தேவைகள் மற்றும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதி குறித்து முழுமையான அறிந்திராத நிலையில், இதன் தாக்கம் உலக பொருளாதாரம் மற்றும் சர்வதேச அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் செயல்படுத்த உள்ள ரயில்வே இணைப்பு மட்டும் 8 முதல் 20 பில்லியன் டாலர் பணம் செலவாகலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்திற்கு கையெழுத்தான புர்ந்துணர்வு ஒப்பந்தத்தில் இதுகுறித்து குறிப்பிடப்படவில்லை. அதேபோல், இந்த திட்டத்தை செயல்படுத்த எந்தெந்த நாடுகள் எவ்வளவு நிதி பகிர்வு அளிக்கின்றன என்பது குறித்தும் இதுவரை பேசிக் கொள்ளவில்லை. சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் இந்த திட்டத்திற்காக 20 பில்லியன் டாலர் நிதி வழங்குவதாக அறிவித்து உள்ளார்.
காசா உடனான பிரச்சினைக்கு மத்தியில் இஸ்ரேலை அரபு நாடுகளுடன் ஒருங்கிணைக்க அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. இந்த முழு திட்டமும் சவுதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நல்லுறவைச் சார்ந்தது, கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இது தொடர்பான ஆபிரகாம் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிலையில், இஸ்ரேலுக்கும், சில அரபு நாடுகளுக்கும் இடையிலான உறவை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இஸ்ரேலுடன் ரயில் இணைப்பை எற்படுத்த சவுதி அரேபியாவுடனான உறவை நம்பியிருக்கும் நிலையில் இந்த திட்டத்தின் இரண்டு முக்கிய மையங்களான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை ஏமன் உள்நாட்டுப் போரின் காரணமாக அதிகளவில் முரண்படுகின்றன.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முயற்சியின் எதிர்வினையாக இந்தியா- மத்திய- கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வழித்தடம் காணப்பட்டாலும், இந்த திட்டத்திற்காக திட்டமிடப்பட்ட போக்குவரத்து பாதையில் சீனா ஏற்கனவே கணிசமான பங்கை கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியா ஐக்கிய அரபு அமிரகத்தின் BRI அமைப்பு மற்றும் பிரிக்ஸ் பிளஸ் (BRICS+) அமைப்பின் உறுப்பினராகவும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிலும் அங்கம் வகிக்கிறது. மேலும், கடந்த 2023ஆம் ஆண்டு எண்ணெய் அல்லாத வர்த்தகத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் உலகளாவிய வர்த்தக கூட்டாளியாக சீனா உள்ளது.
அதைத் தொடர்ந்து சீனாவிற்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான ஆழமான பொருளாதார உறவுகளை இந்தியா கொண்டு உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய தொழில்துறை தளங்கள், தளவாட மையங்கள் மற்றும் முக்கியமான துறைமுகங்களை இணைக்கும் எதிஹாட் ரயில் திட்டத்தில் சீனா ஏற்கனவே முதலீடு செய்துள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள சர்வதேச பொருளாதார வழித்தடத்தின் மூலம் ஓமன், துருக்கி மற்றும் ஈராக்கை அவற்றின் புவியியல் முக்கியத்துவம் காரணமாக சேர்க்க வேண்டும் என்று கருத்து நிலவுகிறது. மேலும், மஸ்கட், ஐக்கிய அரபு அமீரகம் தவிர சவுதி அரேபியாவுக்கு போக்குவரத்துப் புள்ளியாகவும் இவை விளங்குகின்றன.
இந்தியா மற்றும் ஓமன் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தின் ஒரு பகுதியாகவும், ஈரான் மற்றும் மத்திய ஆசியா வழியாக இந்தியாவை ரஷ்யாவுடன் இணைக்கவும் உதவுகிறது. மேலும் துருக்கிக்கும் இந்த திட்டத்தில் முக்கியத்துவம் உள்ளது. ஹைபா மற்றும் கிரீக் துறைமுகம் பைரேயஸ் இடையே உள்ள கடல் பாதை துருக்கி மற்றும் கிரீஸ் இடையே கடக்கும் நிலையில், இதற்கான பங்களிப்பு இரு நாடுகளை சார்ந்ததாக உள்ளது.
இந்தியா- மத்திய- கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வழித்தடத்தின் ஒரு முக்கியமான இணைப்பாக பைரேஸ் துறைமுகம்0 காணப்படுகிறது. சீனா ஓஷன் ஷிப்பிங் கார்ப்பரேஷன் (COSCO) மூலம் நிர்வகிக்கப்படும் சரக்குகளை இஸ்ரேலில் உள்ள ஹைபா துறைமுகத்தில் இருந்து வரும் சரக்குகளையும் இந்த துறைமுகம் நிர்வகிக்கிறது. அதன் காரணமாகவே பொருளாதார வழித்தடத்தில் துருக்கியின் பங்கு முக்கியமாக காணப்படுகிறது.
இந்த பொருளாதார வழித்தட திட்டத்தின் மூலம், இந்தியப் பெருங்கடலின் குறுக்கே அரபிக் கடலில் இணைக்க உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உலக பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் சக்தியில் உலகளாவிய மாற்றத்தைக் குறிக்கும் வகையில் உள்ள இந்த பொருளாதார வழித்தடத்தின் மையப் புள்ளியாக இந்தியா காணப்படுகிறது.
இந்தியா- மத்திய- கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வழித்தடத்தின் வெற்றி என்பது, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் இந்தியா ஒரு முக்கிய வர்த்தக கூட்டாளியாக மாறுவதற்கு திருப்புமுனையாகவும் அமையும். அதேநேரம் இந்த பொருளாதார வழித்தடத்தின் முன்னேற்றம் என்பது BRI அமைப்பின் பின்னடைவாக மாறக் கூடலாம்.
எப்படி இருந்தாலும் இந்தியா- மத்திய- கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வழித்தட திட்டம் வளரும் தருவாயில் உள்ளது. நிதி பிரச்சினைகள், சரியான திட்டமிடல், சர்வதேச அரசியல் பிரச்சினைகளை சமாளிக்கும் வகையில் சரியான திட்டமாக வடிவமைக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க : பருவ நிலை மாற்றத்தால் வரும் விளைவுகள் என்ன? சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய உலக நாடுகளின் திட்டம் என்ன?