ETV Bharat / lifestyle

கிராமத்து ஸ்டைல் மொச்சை கருவாட்டு குழம்பு..இப்படி செஞ்சா சும்மா நறுக்குனு இருக்கும்!

சின்ன வெங்காயம், பூண்டு, மொச்சை சேர்த்து நம்ம அப்பத்தா செஞ்சி கொடுத்த காரசாரமான கருவாட்டு குழப்பு சுவை நியாபகம் இருக்க? இப்ப,அந்த கருவாட்டு குழம்பை மிஸ் பண்ணறீங்கன இப்படி செஞ்சி பாருங்க!

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit- ETVBharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 8, 2024, 12:49 PM IST

கருவாட்டு குழம்பு என்று சொல்லும் போதே பலருக்கும் நாக்கில் எச்சில் ஊற தொடங்கி விடும். காரணம், கருவாட்டு குழம்பிற்கும் நமக்கும் இருக்கும் பந்தம் அப்படி. சின்ன வயதில், கிரமத்திற்கு செல்லும் போதெல்லாம், சுடச்சுட சோற்றில் கருவாட்டு குழம்பு சேர்த்து, நம்ம அப்பத்தா நமக்கு ஆசை ஆசையா உருட்டை பிடிச்சி ஊட்டிய காலம் ஞாபகம் இருக்க? இப்ப நினைத்தாலும், அந்த சுவை நினைவிற்கு வந்து செல்லும்...இப்படியான கருவாட்டு குழம்பை பாரம்பரிய முறையில் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

  • நெத்திலி கருவாடு - 50 கிராம்
  • புளி - 1 எலுமிச்சை பழம் அளவு
  • சின்ன வெங்காயம் - 15
  • பெரிய வெங்காயம் - 1
  • தக்காளி - 2
  • பூண்டு - 20 பல்
  • முருங்கைக்காய் - 1
  • கத்திரிக்காய் - 1
  • உருளைக்கிழங்கு - 1
  • மொச்சை - 1 கப்
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
  • மல்லித்தூள் / குழம்பு மசாலா - 3 ஸ்பூன்
  • நல்லெண்ணெய்/ கடலை எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
  • கடுகு, உளுந்தப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
  • வெந்தயம்- 1/2 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

கிராமத்து ஸ்டைல் கருவாட்டு குழம்பு செய்முறை:

  1. முதலில், கருவாட்டில் சிறிது மஞ்சள் பொடி மற்றும் சுடு தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்
  2. அதே நேரத்தில் குழம்புக்கு தேவையான புளியை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக்கொள்ளுங்கள். கருவாடு ஊறிய பின்னர், அதனை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்
  3. குழம்பு செய்வதற்கு, மண் சட்டி அல்லது குழம்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் வெந்தயம் சேர்க்கவும்.
  4. இவை அனைத்தும் நன்கு பொரிந்து சிவந்து வந்ததும், நீட்டமாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதனுடன், கறிவேப்பிலை மற்றும் இடித்து வைத்த பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
  5. இப்போது, அடுப்பை மிதமான தீயில் வைத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
  6. மசாலா நிறம் மாறி, எண்ணெய் பிரிந்ததும் நீட்டவாக்கில் நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  7. தக்காளி எல்லாம் நன்றாக வதங்கி தொக்கு பதத்திற்கு வந்ததும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து 3 நிமிடங்களுக்கு வதக்கவும். அதன்பின், வேக வைத்துள்ள மொச்சை சேர்த்து 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
  8. காய்கறிகள் வதங்கி கெட்டியானதும் கருவாடு சேர்த்து வேக வைத்துவிடுங்கள். இப்போது, புளி கரசலை சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்கள். (தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்)
  9. இறுதியாக மிதமான தீயில், 10 நிமிடங்களுக்கு மூடி வைத்து வேக வைத்து இறக்கினால் சும்மா காரசாரமான கிராமத்து ஸ்டைல் கருவாட்டு குழம்பு தயார்...அப்புறம் என்ன? இன்னைக்கே செய்து ஒரு புடி புடியுங்கள்!

இதையும் படிங்க:

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.