ஐதராபாத்: தற்போது சீத்தாப்பழ சீசன் துவங்கி உள்ள நிலையில், சீத்தாப்பழத்தை வைத்து சூப்பர் சூப்பர் ரெபிசிகளை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.
1. சீதாப்பழ புட்டிங்
தேவையானவை:
சீத்தாப்பழம் - 6
பால் - 250 மில்லி லிட்டர்
கடல் பாசி (அகர் அகர்)
கண்டன்ஸ் மில்க் (Condensed Milk) - 1கப்
துருவிய பாதம், பிஸ்தா - 5 எண்ணிக்கை
ப்ரஷ் கிரீம் (Fresh Cream) - 1 கப்
செய்முறை:
6 சீதாப்பழத்தில் உள்ள சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து கொள்ள வேண்டும். கடல் பாசியை தண்ணீரில் கழுவி, பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் சேர்த்து அதில் கடல் பாசியை போட்டு கொதிக்க விட வேண்டும். கடல் பாசி கரைந்து வந்தவுடன் அடுப்பை அணைக்க வேண்டும்.
அதன் பின் ஒரு மிக்ஸி ஜாரில் 1 கப் ப்ரஷ் கிரீம், பால், கண்டன்ஸ் மில்க் (Condensed Milk), சீதாப்பழத்தின் சதைப்பகுதி, உருக்கிய கடல் பாசி ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதன் மேல் துருவிய பாதாம், பிஸ்தாவை தூவி விட்டு 8 மணி நேரம் ப்ரீசரில் வைத்து எடுத்தால் அட்டகாசமான சீத்தாப்பழ புட்டிங் ரெடி.
இதையும் படிங்க: இனி இடுப்பு வலிக்கு சொல்லுங்க பை-பை...சுவையான உளுந்து களி செய்வது எப்படி? - HOW TO MAKE ULUNDHU KALI
2. சீதாப்பழ பாயாசம்
தேவையானவை:
சீத்தாப்பழம் - 2
சர்க்கரை - 4 டீஸ்பூன்
பால் - 500 மில்லி லிட்டர்
துருவிய பாதாம், பிஸ்தா, முந்திரி - விருப்பத்திற்கேற்ப
செய்முறை:
சீதாப்பழத்தில் உள்ள சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, பால் பாதியளவு வரும் வரை காய்ச்ச வேண்டும். பின் அதில் சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை கரைந்த உடன் அதில் துருவிய பாதாம், பிஸ்தா, முந்திரியை சேர்க்க வேண்டும்.
இவை நன்றாக கலந்த பின் அடுப்பை அணைத்து விட வேண்டும். பால் ஆறிய பின் அதில் சீதாப்பழத்தை சேர்த்து பீட்டர்/ விஸ்க் (Beater/ whisk) மூலம் சீதாப்பழத்தை மசித்து விட சுவையான சீதாப்பழ பாயாசம் தயார்.
3.பாசுந்தி:
தேவையானவை:
பாதாம் - 6
பால் - 500 மில்லி லிட்டர்
ஏலக்காய் பொடி - அரை ஸ்பூன்
சர்க்கரை - 50 கிராம்
துருவிய பாதாம், பிஸ்தா - தேவைக்கேற்ப
செய்முறை:
சீதாப்பழத்தில் உள்ள சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து அதனை மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும். 6 பாதாமை வெந்நீரில் ஊற வைத்து அரை மணி நேரம் கழித்து, தோல் உரித்து தூள் போல அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
அதில் அரை ஸ்பூன் ஏலக்காய் பொடி, 50 கிராம் சர்க்கரை சேர்த்து ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும். பால் பாதியளவு வற்றியப்பின் அதில் அரைத்த பாதாமை சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும். சர்க்கரை நன்றாக கலந்த பின், அடுப்பை அணைத்து விட்டு, ஆற விட வேண்டும். ஆறிய பின் அதில் அரைத்த சீத்தாப்பழத்தைச் சேர்த்து துருவிய பாதாம், பிஸ்தாவை தூவி பரிமாறலாம்.