ETV Bharat / lifestyle

பூஜை பாத்திரம் பளபளக்க..'இந்த' பொடியை பயன்படுத்தி பயன்பெறுங்கள்!

படிகார கல் தூளை பூஜை பாத்திரத்தில் நன்றாக தேய்த்து கழுவினால் பித்தளை பூஜை பாத்திரங்கள் பளபளப்பாக மாறும். பூஜை பாத்திரங்களை கழுவும் மற்ற முறைகள் என்னென்ன? என்பதை பார்க்கலாம்...

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : 2 hours ago

தீபத் திருநாளான தீபாவளியை வரவேற்க அனைவரும் வீட்டில் உள்ள பூஜை பாத்திரங்களை பளபளப்பாக்கும் வேலையில் மும்முரமாக இருப்பார்கள். பூஜை பாத்திரத்தில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுக்கை போக்குவது ஒரு புறம் இருந்தாலும், மற்றொரு புறம் எவ்வளவு அழுத்தி தேய்த்தாலும் விளக்கு பொழிவிழந்து காணப்படும்.

இப்படியான சூழ்நிலையில் தான், எளிதாக எப்படி பூஜை பாத்திரங்களை கழுவுவது? புதியது போல பூஜை பாத்திரங்கள் பளபளப்பாக்க என்ன செய்ய வேண்டும்? என்பதற்காக ஈஸியான டிப்ஸ்களை கொண்டு வந்திருக்கிறோம். ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்

உப்பு - 2 டீஸ்பூன்

புளி விழுது - 2 டீஸ்பூன்

பூஜை பாத்திரங்களை கழுவுவது எப்படி?:

  • முதலில், ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு,உப்பு மற்றும் தண்ணீரில் ஊற வைத்த புளி விழுதை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்
  • இப்போது, பூஜை பாத்திரத்தில் இருக்கும் எண்ணெய்யை டிஸ்யூ பேப்பரால் துடைக்கவும். அதே போல, பாத்திரத்தில் இருக்கும் சந்தனம் மற்றும் குங்குமத்தை தண்ணீரல் கழுவி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
  • பின்னர், தேங்காய் நாரை பயன்படுத்தி நாம் கலந்து வைத்துள்ள கலவையை பாத்திரத்தின் அனைத்து பகுதிகளிலும் படுவது போல நன்றாக தேய்த்து விடுங்கள்.
  • பிறகு, தண்ணீரால் இந்த பாத்திரங்களை கழுவிய பின்னர், காட்டன் துணியை பயன்படுத்தி பாத்திரத்தில் இருக்கும் ஈரத்தை துடைத்து விடுங்கள்.

பளபளப்பாக முக்கிய குறிப்பு: பூஜை பாத்திரம் புதியது போல பளபளப்பாக மாற வேண்டுமென்றால், பாத்திரத்தில் ஈரப்பதம் முற்றிலுமாக போனதும் இறுதியாக விபூதியை ஒரு துணியால் தொட்டு பாத்திரங்கள் மீது தேய்க்க வேண்டும். இப்படி செய்தால், பாத்திரம் ஜொலிப்பது உறுதி.

  • படிகாரக் கட்டி: முதலில், பூஜை பாத்திரத்தில் இருக்கும் எண்ணெய் பிசுக்கை டிஸ்யூ அல்லது காட்டன் துணியால் துடைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் (தண்ணீர் பயன்படுத்தக்கூடாது)

இப்போது இந்த பாத்திரத்திரங்கள் மீது படிகாரக் கல் தூளை நன்றாக தூவி 15 நிமிடங்களுக்கு வைத்து விடுங்கள். பின்னர், விரல்கள் அல்லது துணியால், பாத்திரத்தை தேய்த்து கொள்ளுங்கள். இப்படி செய்யும் போதே, விளக்கில் உள்ள எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்கு நீங்குவதை நீங்கள் பார்க்கலாம். இறுதியாக, நாம் சமைக்கும் பாத்திரங்களை கழுவும் விம் அல்லது சோப்பை பயன்படுத்து கழுவினால், பித்தளை பாத்திரங்கள் பளபளப்பாகும்.

இதையும் படிங்க:

தீபாவளி எண்ணெய் குளியல்..காய்ச்சும் முறையும் பயன்படுத்தும் முறையும் இப்படி தான்!

தீபாவளி லேகியம் செய்வது எப்படி? சர்க்கரை முதல் ஜீரணக் கோளாறு வரை ஒரே தீர்வு!

அகல் விளக்கு எண்ணெய் பிசுக்காக இருக்கிறதா? இப்படி செய்தால் புதியது போல ஜொலிக்கும்!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.