ETV Bharat / lifestyle

காய்கறிகளை இனிமே இப்படி பார்த்து வாங்குங்க..ஒரு வாரமானாலும் கெடாமல் இருக்கும்! - TIPS TO BUY FRESH VEGETABLES

கத்திரிக்காயின் காம்பு பச்சை நிறத்தில் இருந்தால் சமைப்பதற்கு ஏற்ற காய். இது போன்று, ஒவ்வொரு காய்கறிகளையும் எப்படி தரம் பார்த்து வாங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : 2 hours ago

சமைத்த உணவு சுவையாக இருக்க காய்கறிகள் நல்லதாக இருக்க வேண்டும். ஆனால், இன்றும் பெரும்பாலானோர்க்கு எப்படி காய்கறிகளை வாங்க வேண்டும் என பிடிபடுவதில்லை. அவர்களில் நீங்களும் ஒருவரா? கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பின்பற்றி அடுத்த முறை காய்கறி வாங்கிப்பாருங்கள். வீட்டில் பாராட்டு மழை பொழிவது நிச்சயம்.

வெங்காயம்: சமையலுக்கு அத்தியவசியமாக இருக்கும் வெங்காயத்தை வாங்கும் போது, அடிப்பகுதியில் அமுக்கி பார்க்க வேண்டும். பின்பகுதி கெட்டியாக இல்லாமல் அமுங்கினால் அது அழுகிய வெங்காயம். ப்ரஸான வெங்காயம் கெட்டியாக இருக்கும் என்பதை நினைவில் வைத்து வாங்குங்கள். அதுமட்டுமல்லாமல், வாங்கிய வெங்காயத்தை கூடையில் போடாமல், பேப்பரில் பரப்பி விட்டால் சீக்கிரம் அழுகாமல் இருக்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)

தக்காளி: தக்காளியின் மேல்பகுதியில் ஓட்டை இருக்கக்கூடாது. பார்ப்பதற்கு நல்ல கெட்டியாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், தக்காளியின் காம்பு அருகே பச்சையாகவும், அடிப்பகுதி சிவப்பாக இருந்தால் தாராளமாக வாங்கலாம்.

முருங்கைக்காய்: பொதுவாக, முருங்கைக்காயை முறுக்கி பார்த்து வாங்க வேண்டும். முருங்கைக்காயின் மேல் பகுதி முக்கோனமாக இருந்தாலோ அல்லது முறுக்கும் போது உடைந்தால் அது முற்றிய காய். அதே போல, காய் கருப்பாக இருந்தால் கசப்பாக இருக்கும். இந்த மூன்றும் இல்லாமல் இருந்தால் அது தான் பிஞ்சு முருங்கைக்காய்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)

உருளைக்கிழங்கு: குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு பிடித்த உருளைக்கிழங்கை சுரண்டிப் பார்த்து வாங்க வேண்டும். உருளைக்கிழங்கு மீது ஓட்டை, தழும்பு அல்லது பச்சையாக இருந்தால் வாங்கவேண்டாம். உருளைக்கிழங்கு கனமாக இருக்க வேண்டும், அதே போல, சுரண்டும் போது தோல் எளிமையாக உரிந்தால் நல்லது.

முட்டைகோஸ்: முட்டைகோஸ் பார்ப்பதற்கு வெள்ளையாக இருந்தாலும், அதனை உரித்து பார்த்தால் தான் அழுகி உள்ளதா என்பது தெரியும். காய் வெயிட்டாகவும், சின்னதாகவும் இருந்தால் நல்ல காய். அதே போல, காயில் கருப்பு நிறம் படிந்திருந்தால் வாங்க வேண்டாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)

கத்திரிக்காய்: கத்திரிக்காயை காம்பு பார்த்து வாங்க வேண்டும். காம்பு சின்னதாக இருந்தால் கசக்கும், அதே போல, அங்காங்கே ஓட்டையாக இருந்தால் அது பூச்சி அரித்த காய். கத்திரியின் காம்பு பெருசாகவும் பச்சையாகவும் இருந்தால் அருமையாக இருக்கும்.

வாழைக்காய்: வாழைக்காயின் காம்பு பகுதியின் மேல் வெள்ளையாக இருந்தால் அது நல்ல காய். இருப்பினும், இரண்டு நாளில் வாழைக்காய் பழுத்துவிடும் என்பதால், வாங்கியதும் சமைத்து விடுங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Pexels)

பீட்ரூட்: பீட்ரூட்டை கீறிப் பார்த்து வாங்க வேண்டும் என்பதை நினைவில் வைக்கவும். பீட்ரூட்டை கீறும் போது அடர் சிவப்பாக இருந்தால் அது ஊட்டி பீட்ரூட். இதுவே, இளம் சிவம்பு நிறத்தில் இருந்தால் சாதாரன பீட்ரூட். ஊட்டி பீட்ரூட் சுவையாக இருக்கும், மற்றவை உப்பு கரிக்கும்.

  • அவரைக்காய்: அவரைக்காய் வாங்கும் போது விதையை தொட்டு பார்த்து வாங்க வேண்டும். விதை பெரியதாக இருந்தால் அது முற்றிய காய். அதே விதை சின்னதாக அல்லது இல்லாதது போல இருந்தால் சமையலுக்கு ஏற்றது.
  • பீன்ஸ்: நிறத்தை பார்த்து பீன்ஸை எடுக்க வேண்டும். பீன்ஸ் வெள்ளரி பச்சை நிறத்தில் இருந்தால், அது முற்றியது. அடர் பச்சை நிறத்தில் இருந்தால் நல்ல பீன்ஸ்.
  • பீர்க்கங்காய்: காயின் அடிப்பகுதி குண்டாக இருக்க கூடாது மற்றும் காய் அடர் பச்சை நிறத்தில் இருக்க கூடாது.
  • காலிபிளவர்: பூக்களைப் பார்த்து காலிபிளவரை வாங்க வேண்டும். பூக்களில் அதிக இடைவெளி இல்லாமல் நெருக்கமாக இருந்தால் அவை தரமானது. இடைவெளி இருந்தால், அதில் பூச்சிகள் இருக்க வாய்ப்பு உள்ளது.
  • முள்ளங்கி: முள்ளங்கி பெரிதாகவும் சின்னதாகவும் இருக்க கூடாது. நடுத்தர உயரத்திலும், முள்ளங்கிக்கு மேல் உள்ள இலைகளை பச்சையாக இருந்தால் நல்ல காய்.
  • செள செள: செள செள வாங்கும் போது, காயின் மீது விரிசல் உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். அதிகமான விரிசல் இருந்தால் அது முற்றிய காய்.

இதையும் படிங்க:

அகல் விளக்கில் எண்ணெய் பிசுக்கு நீங்க இப்படி கழுவினால் போதும்..இனி, கை வலிக்க தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை!

வீட்டில் கரையான் தொல்லையா? உப்பு இருந்தால் ஒரே வாரத்தில் அழித்துவிடலாம்..ட்ரை பண்ணுங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.