ETV Bharat / lifestyle

மழைக்காலத்தில் துணி காய மாட்டேங்குதா? இந்த 8 டிப்ஸ்களை ஃபாலோ பண்ணி பாருங்க! - TIPS TO DRY CLOTHS IN RAINY SEASON

மழைக்காலத்தில் எப்படி தான் துணியை காய வைப்பது என யோசிக்கிறீர்களா? உங்களுக்காக 8 எளிய டிப்ஸ்களை கொண்டு வந்திருக்கிறோம். ட்ரை பண்ணி பாருங்க.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Freepik)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 29, 2024, 12:34 PM IST

மழைக்காலம் வந்துவிட்டால் பெரும்பாலனோர் சந்திக்கும் முதல் பிரச்சனை துணிகளை உலர வைப்பது தான். மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருப்பதால், துணி காய்வதில் சிரமம் ஏற்படுகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில், சில டிப்ஸ்கள் மூலம் எப்படி துணிகளை காய வைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..

டிப் 1: துணி துவைத்த பின், எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு துணியில் உள்ள தண்ணீரை நன்றாக கைகளால் பிழிய வேண்டும். இல்லையென்றால், துவைத்த துணிகளை தண்ணீர் குழாய் மீது அடுக்கி 15 நிமிடங்களுக்கு பின் பார்த்தால் தண்ணீர் நன்றாக வடிந்திருக்கும். இப்போது துணிகளை காய வைத்தால் காயும் நேரம் கட்டாயமாக குறையும்.

துணிகளை காய வைப்பதற்கு முன் துணியில் உள்ள தண்ணீரை நன்கு பிழிந்திருக்க வேண்டும்
துணிகளை காய வைப்பதற்கு முன் துணியில் உள்ள தண்ணீரை நன்கு பிழிந்திருக்க வேண்டும் (Credit - Getty images)

டிப் 2: ஈரப்பதத்துடன் இருக்கும் துணியை அயர்னிங் செய்தால் துணி நிமிடங்களில் காய்ந்துவிடும். அதுமட்டுமல்லாமல், சுருக்கங்களும் நீங்கும். இதனை கவனமுடன் செய்ய வேண்டும்.

டிப் 3: துணிகளை ஃபேனிற்கு அடியில் காய வைத்தாலும், மழைக்காலத்தில் துணி முற்றிலுமாக காய இரண்டு நாட்கள் கூட ஆகலாம். இந்த மாதிரியான சூழ்நிலையில், துணி காய வைக்கும் அறையில் டிஹைமிடிஃபையர் (Dehumidifier) பயன்படுத்தலாம். இது, காற்றில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி துணிகள் காய்வதற்கு உதவியாக இருக்கிறது.

டிப் 4: மழைக்காலங்களில், வீடு முழுவதும் கயிறு கட்டி காய வைப்பது ஒரு புறம் சிரமம் என்றாலும்,மறுபுறம் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால், துணிகளை காய வைப்பதற்கு என கடைகளில் கிடைக்கும் ஸ்டாண்டுகளை பயன்படுத்தலாம். ஈரமான துணிகளை நெருக்கமாக போடாமல், இடைவெளிவிட்டு போட்டால் சீக்கிரமாக துணிகள் உலரும்.

இதையும் படிங்க: மழைக்கால நோய்கள்...குழந்தைகள் முதல் பெரியவர்களை பாதுகாப்பது எப்படி? மருத்துவர் பரிந்துரை!

டிப் 5: மழைக்காலங்களில், சற்று அதிக வேளைப்பாடுகள் உள்ள துணிகள் மற்றும் கனமான துணிகளை துவைப்பதை தவிர்க்க வேண்டும். உதாரணத்திற்கு, பெட் ஷீட், ஜீண்ஸ் பேண்ட் போன்றவற்றை துவைக்க வேண்டாம். அத்தியவசியமான மற்றும் வெளியிடங்களுக்கு சென்றால் தேவைப்படும் துணிகளை மட்டும் துவைக்க வேண்டும்.

துணி காய வைக்கும் ஸ்டாண்டில் போதிய இடைவெளிவிட்டு துணிகளை காய வைக்க வேண்டும்
துணி காய வைக்கும் ஸ்டாண்டில் போதிய இடைவெளிவிட்டு துணிகளை காய வைக்க வேண்டும் (Credit - Getty images)

டிப் 6: வாஷிங் மெஷினில் துணிகளை துவைப்பவர்கள், டிடர்ஜெண்டுடன் ஒரு கப் வினிகர் சேர்த்தால் துணிகளில் நாற்றம் வராது. அதே போல,கைகளால் துவைப்பவர்கள், துணிகளை ஊறவைக்கும் தண்ணீரில் டிடர்ஜெண்டுடன் சிறிது வினிகரையும் சேர்ப்பது மழைக்காலத்தில் துணிகளில் ஏற்படும் நாற்றத்தை தடுக்கும்.

டிப் 7: அவசரமாக ட்ரெஸை காய வைக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், ஹேர் ட்ரையரை கூல் செட்டிங்கில் வைத்து, 6 இன்ச் இடைவெளியில் துணிகள் மீது காட்டினால், துணிகள் உலரும்.

டிப் 8: மழைக்காலத்தில் சூரிய வெளிச்சம் இல்லாமல் துணி காய்வதால், உலர்ந்த பின் துணியில் துர்நாற்றம் ஏற்படலாம். இதனை தடுக்க, துணி அலசும் கடைசி தண்ணீரில் ஒரு எலுமிச்சை பழச் சாறு பிழிந்து துணியை அலசுங்கள்.

இதையும் படிங்க: ஊறுகாயில் வெள்ளை நிறத்தில் பூஞ்சையா? மழைக்காலத்திடம் இருந்து ஊறுகாய்யை பாதுகாக்க டிப்ஸ் இதோ!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.