ETV Bharat / lifestyle

செலவே இல்லாமல் முடி பிரச்சனை அனைத்தும் நீங்க..6 சூப்பர் ஹேர் மாஸ்க் இதோ! - HAIR GROWTH HAIR MASKS

வேக வைத்த சாதத்துடன் அரிசி ஊறவைத்த தண்ணீரை சேர்த்து அரைத்து தலை முடியில் தடவி குளித்து வர முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும். இது போன்ற டிப்ஸ்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Etv Bharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : 3 hours ago

முடி உதிர்வு, பொடுகு தொல்லை, முடி வறட்சி, முடி உடைதல் என தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்களா? வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிமையாக ரெடி செய்யும் இந்த 6 ஹேர் மாஸ்க்களை ட்ரை பண்ணி பாருங்க. இனிமேல், தலைமுடியில் எந்த பிரச்சனையும் வராது.

முடி வறட்சியா இருக்கா? : ஒரு கிண்ணத்தில் உங்கள் முடியின் அளவிற்கு ஏற்ப நெய் மற்றும் அலோ வேரா ஜெல் சேர்த்து கலந்து, முடியில் நன்கு தடவவும். பின்னர், 30 நிமிடங்களுக்கு ஊற வைத்து லேசான ஷாம்புவால் கழுவவும். நெய், முடியை மென்மையாக மாற்றி பளபளப்பாகவும் நீரேற்றமாகவும் வைக்க உதவியாக இருக்கும். அதே போல், அலோ வேரா ஜெல் உச்சந்தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி புத்துணர்சியுடன் வைக்க உதவியாக இருக்கிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Etv Bharat)

உச்சந்தலையில் இருக்கும் அழுக்கை நீக்க: 2 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர், இதனை முடியின் வேர் பகுதியில் நன்கு தடவி 1 நிமிடத்திற்கு மசாஜ் செய்யவும். சர்க்கரை, உச்சந்தலையில் தேங்கியிருக்கும் அழுக்கு, தூசி மற்றும் இறந்த செல்களை நீக்கும். ஆலிவ் எண்ணெய், உச்சந்தலையை ஈரப்பதமாக வைத்திருக்க உதவி செய்யும். இந்த ஹேர் மாஸ்கை மாதத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினால் போதும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Etv Bharat)

முடி ஸ்ட்ராங்காக வளர்வதற்கு: முடியின் அளவிற்கு ஏற்ப, வேகவைத்த சாதம் மற்றும் அரிசி ஊறவைத்த தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும். இதனை, உச்சந்தலை முதல் முடிகளில் நன்கு தடவி ஒரு மணி நேரத்திற்கு அப்படியே விட்டு தண்ணீரில் கழுவினால் போதும். அரிசி ஊறவைத்த தண்ணீர் முடியை வலுவாக வளர உதவி செய்வதோடு நீளமாக வளரவும் உதவி செய்யும். வேக வைத்த சாதம், முடியை மென்மையாகவும் பளபளப்பாக்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Etv Bharat)

இதையும் படிங்க: முன் நெற்றியில் முடி உதிர்வா? கொட்டிய முடியை வளர வைக்க 5 சூப்பர் டிப்ஸ் இதோ!

அரிப்பு மற்றும் பொடுகு தொல்லை: 1 டீஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் 2 டீஸ்பூன் வேப்ப எண்ணெய் கலந்து உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்து 30 நிமிடங்களுக்கு பின் தலைக்கு குளிக்கவும்.உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் பொடுகு தொல்லையை நீக்க இஞ்சி சாறு உதவுகிறது. வேப்ப எண்ணெய் முடி ஆரோக்கியமாக வளர செய்யும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Etv Bharat)

முடி சாஃப்டாக?: 3 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன், 2 டீஸ்பூன் தேன் கலந்து முடியின் வேர்பகுதியில் இருந்து நுனி பகுதி வரை தடவி, 30 நிமிடத்திற்கு பிறகு முடியை கழுவவும். இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம். ஆலிவ் எண்ணெய் முடியின் வேர்பகுதியை ஆரோக்கியமாக இருக்க செய்து பாதுகாக்கிறது. மேலும், தேன் வறட்சியான முடியை மென்மையாக்க உதவியாக இருக்கிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Etv Bharat)

முடி வளர்ச்சிக்கு: 3 டீஸ்பூன் ரோஸ்மேரி பவுடர் அல்லது கரிசலாங்கண்ணி பொடியுடன் 3 டீஸ்பூன் அலோ வேரா ஜெல் கலந்து முடி முழுவதும் நன்கு தேய்த்து அரை மணி நேரத்திற்கு பின் குளிக்கவும். கரிசலாங்கண்ணி பொடி, முடி உதிர்வை தடுப்பதோடு முடி வளர்ச்சியை ஊக்கு விக்கிறது. அலோ வேரா ஜெல் முடியை வலு பெற செய்கிறது.

இதையும் படிங்க:

30 நாளில் முடி உதிர்வை தடுக்கும் கரிசலாங்கண்ணி எண்ணெய்..இப்படி தயாரித்து இவ்வாறு பயன்படுத்துங்கள்!

குளிர்காலத்தில் பொடுகு தொல்லை அதிகரித்து முடி கொட்டுகிறதா? இந்த ஹேர் மாஸ்குகளை ட்ரை பண்ணுங்க!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.