சார்ஜா: உலகின் மிகப்பெரிய அளவிலான 300 கிலோ தங்கக் கட்டி துபாயில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. துபாயில் தங்கத்திற்கான பிரத்யேகமான மற்றும் புகழ்பெற்ற இடமாக சிறந்த விளங்கும் 'துபாய் கோல்ட் சூக்' (Dubai Gold Souk Extension) என்ற பகுதியில் இந்த தங்கக்கட்டி காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.
முன்னதாக இந்த தங்க கட்டியின் வெளியிட்டு விழா நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்ட இந்த தங்கக் கட்டியை பார்வையாளர்கள் நேரில் சென்று காணலாம் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக ஜப்பானில் காட்சிப்படுத்தப்பட்ட 250 கிலோ தங்கக் கட்டிதான் இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தங்கத் தொழிற்சாலையின் துணைப் பொது மேலாளர் முகமது கர்சா கூறுகையில், "இதைத் தயாரிக்க 8 முதல் 10 மணி நேரம் ஆகும். இதனுடைய முழு விவரங்களையும் கின்னஸுக்கு அனுப்பப்பட்டது என்று குறிப்பிட்டார். மேலும் இதன் மதிப்பு சுமார் ரூ.211 கோடி எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிரியாவில் இருந்து இந்தியர்கள் வெளியேற வேண்டும்... போர் தீவிரம் அடைந்ததை அடுத்து மத்திய அரசு அறிவுறுத்தல்!
கின்னஸ் உலக சாதனை இணையதளத்தின்படி,"Emirates Minting Factory LLC- இன் இந்த செயல்பாடானது, தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் துறையில் புதுமை மற்றும் சிறந்து விளங்குவதற்கான துபாயின் அர்ப்பணிப்பைக் கொண்டாடுகிறது. இந்த நிகழ்வு ஆடம்பர மற்றும் வர்த்தகத்தில் துபாயின் முன்னணி நிலையை மேம்படுத்துவதில் உள்ளூர் சில்லறை விற்பனையாளர்களின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த 300 கிலோ தங்கக் கட்டியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு களித்தனர். மேலும் கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டியின் அருகே நின்று பார்வையாளர்கள் ஆர்வமுடன் செல்ஃபி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.