வாஷிங்டன்: நேட்டோ உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேடையில் உரை நிகழ்த்திய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபரை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து பேசிய பைடன், அடுத்ததாக தைரியம் மிக்க மற்றும் உறுதித்தன்மை கொண்ட உக்ரைன் அதிபர் புதினை மேடையில் பேச அழைப்பதாக கூறினார்.
அதன் பின் சுதாரித்துக் கொண்ட பைடன், மீண்டும் மேடை ஏறி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி என்று மீண்டும் அழைத்தார். அமெரிக்க அதிபர் பைடனின் இந்த பேச்சால் சில விநாடிகள் ஜெலன்ஸ்கி குழப்பத்திற்கு உள்ளனார். அதேபோல், செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அதிபர் பைடன், துணை அதிபர் டிரம்ப் என்று கூறினார்.
Biden is Blunder King 😂
— BALA (@erbmjha) July 12, 2024
Watch Zelensky's reaction when Biden calls him Putin! pic.twitter.com/SlGVFBB9ze
துணை அதிபர் கமலா ஹாரீஸ் என்று சொல்வதற்கு பதிலாக துணை அதிபர் டிரம்ப் என்று பைடன் கூறியதும் சர்ச்சையை கிளப்பியது. அண்மைக் காலமாகவே அதிபர் டிரம்ப் மீது இது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர் கதையாக காணப்படுகின்றன. பொது வெளியில் பேச அதிக நேரம் எடுத்துக் கொள்வது, விவாதங்களில் பேசும் போது தடுமாறுவது, அறவே தொடர்பு இல்லாமல் பேசுவது, உடல் நலன் சார்ந்து இந்த விமர்சனங்கள் பைடன் மீது உள்ளன.
Oh MY GOD.
— Supertanskiii (@supertanskiii) July 11, 2024
Now Biden has just referred to Vice president Kamala Harris as VICE PRESIDENT TRUMP.
What the fuck is going on?!
This is actually painful to watch.pic.twitter.com/fHYKtk95BF
அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான முதல் விவாதத்தில் டிரம்ப் உடன் விவாதம் மேற்கொண்ட போதும் அவரது பேச்சில் வேகம் இல்லை எனக் கூறப்பட்டது. இருப்பினும், பயணம் மற்றும் போதிய தூக்கம் இல்லாதததே இதற்கு காரணமாக பைடன் தரப்பில் கூறப்பட்டது. நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக பைடன் போட்டியிடக் கூடாது என சொந்தக் கட்சி உறுப்பினர்கள் போர்க் கொடி தூக்கி உள்ளனர். இருப்பினும் அதிபர் ரேஸில் தான் நீடிப்பதாக ஜோ பைடன் தெரிவித்து வருகிறார்.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து உக்ரைனுக்கு பல்வேறு வகையிலான உதவியை அமெரிக்கா வழங்கி வருகிறது. இதுவரை உக்ரைனுக்கு 175 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ மற்றும் பொருளாதார தொகுப்புகளை அமெரிக்கா வழங்கியுள்ளது. இந்நிலையில், 225 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ தொகுப்பை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா அரசு அறிவித்து உள்ளது.
இதையும் படிங்க: நேபாளத்தில் ஆற்றில் பேருந்துகள் விழுந்து 66 பேர் மாயம்! என்ன நடந்தது? - Nepal Bus Accident 66 missing