டெல்லி : ஐநா பொதுச் சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் வரும் ஜனவரி 22ஆம் தேதி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஜனவரி 26ஆம் தேதி வரை அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பயணத்தின் இடையே இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்து பேசும் டென்னிஸ் பிரான்சிஸ், சர்வதேச பிரச்சினைகள், இஸ்ரேல் - ஹமாஸ் போர் மற்றும் உக்ரைன் - ரஷ்யா போர் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதகா உகாண்டா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள டென்னிஸ் பிரான்சிஸ், அங்கு நடைபெறும் Non-aligned Meeting எனப்படும் கூட்டணியில்லா மாநாட்டில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து 3வது தெற்கு Group of 77 மாநாட்டில் கலந்து கொள்ளும் அவர், அங்கிருந்து இந்தியா வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பயணத்தின் இடையே அவர் நாளை (ஜன. 21) சீனாவுக்கும் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஐநா பொதுச் சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டென்னிஸ் பிரான்சிஸ் முதல் முறையாக இந்தியா வர உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மத்திய அரசின் அழைப்பை ஏற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வருகிறார்.
ஜனவரி 26ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதனிடையே ஐநா பொதுச் சபை தலைவர் இந்நேரத்தில் இந்தியா வருவது மூன்று முக்கிய தலைவர்களும் உலக பொருளாதாரம் மற்றும் போர் உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : டெல்லி வரும் பிரான்ஸ் அதிபர்.. குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்பு!