ETV Bharat / international

வங்கதேசத்தின் புதிய தலைமை நீதிபதியானார் சையத் ரெஃபாத் அகமது! - Syed Refaat Ahmed - SYED REFAAT AHMED

Bangladesh CJ Syed Refaat Ahmed: வங்கதேசத்தில் நீதித்துறையை மறுசீரமைக்கக் கோரி போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து புதிய தலைமை நீதிபதியாக சையத் ரெஃபாத் அகமது பதவியேற்றார்.

தலைமை நீதிபதி சையத் ரெஃபாத் அகமது
தலைமை நீதிபதி சையத் ரெஃபாத் அகமது (Credit - The Daily Star)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 11, 2024, 4:02 PM IST

டாக்கா: வங்கதேசத்தில் மாணவர்கள் இயக்கத்தின் போராட்டத்தை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி வீழ்த்தப்பட்டு பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாணவர்கள் இயக்கத்தினர் தொடர்ச்சியாக கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அந்த வகையில், வங்கதேசத்தில் நீதித்துறையை மறுசீரமைக்கக் கோரி மாணவ இயக்கம் உச்சநீதிமன்றம் முன்பு திரண்டனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்த ஒபைதுல் ஹசன் உள்ளிட்ட 6 நீதிபதிகள் ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 11) உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக சையத் ரெஃபாத் அகமது பதவியேற்றுக் கொண்டார்.

ஜனாதிபதி இல்லத்தில் இன்று நடந்த பதவியேற்பு விழாவில் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் கலந்துகொண்டார். அப்போது, நாட்டின் 25வது தலைமை நீதிபதியாக சையத் ரெஃபாத் அகமதுக்கு ஜனாதிபதி ஷஹாபுதீன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதையும் படிங்க: 'வங்க தேசத்தில் இந்து சமுதாயம் பாதுகாப்பாக உள்ளது' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்து மகா கூட்டணி..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.