ETV Bharat / international

இஸ்ரேல் பிரதமர் வீட்டின் மீது ட்ரோன் மூலம் தாக்குதல்... நடந்தது என்ன? - ISRAELI PRIME MINISTER

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் மீது ட்ரோன் மூலம் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தாக்குதலின் போது பிரதமர் வீட்டில் இல்லை என்று இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Image credits-AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2024, 3:20 PM IST

ஜெருசலேம்: ட்ரோன் மூலம் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதில் 1200 பேர் உயிரிழந்தனர். 250 பிணை கைதிகளையும் ஹமாஸ் இயக்கத்தினர் பிடித்துச் சென்றனர். ஹமாஸுக்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸ் இயக்கத்தின் முக்கியத்தலைவர்களில் ஒருவரான யாஹ்யா சின்வார் என்பவரை இஸ்ரேல் படைகள் நேற்று முன்தினம் கொன்றன. இந்த நிலையில் சிசேரியா நகரில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டை நோக்கி ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. ட்ரோன் தாக்குதல் நடந்த தருணத்தில் பெஞ்சமின் நெதன்யாகு, அவரது மனைவி யாரும் வீட்டில் இல்லை என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்ட ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் யாஹ்யா சின்வாரின் பின்னணி என்ன?

வெள்ளிக்கிழமையன்று ஹிஸ்புல்லா தெரிவித்த தகவலில், "இஸ்ரேல் மீது மேலும் கூடுதலாக ஏகவுகனைகள், ட்ரோன்களை கொண்டு புதிய தாக்குதலை தொடங்க உள்ளோம்,"என்று கூறப்பட்டிருந்தது. இதன் பின்னரே இஸ்ரேல் பிரதமர் வீட்டின் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் சின்வார் கொல்லப்பட்டது குறித்து பேட்டியளித்துள்ள ஈரான் சுப்ரீம் தலைவர் அயதுல்லா அலி கமேனி, "சின்வார் மரணம் வலிதரும் இழப்பு. அவருக்கு முன்பு இதர பாலஸ்தீன தலைவர்கள் கொல்லப்பட்டபோதும் ஹமாஸ் தொடர்ந்து முன்னேக்கி சென்று வருகிறது. ஹமாஸ் இன்னும் உயிரோடு இருக்கிறது. தொடர்ந்து உயிரோடு இருக்கும்,"என்று தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.