காத்மண்டு: நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஊழியர்கள் உள்பட 19 பேர் பயணித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி அளவில் விமானம் புறப்பட்ட நிலையில் சிறிது நேரத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் தீ பற்றிய நிலையில், விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகை வெளியேறியது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து மீட்பு தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக விமான விபத்தில் சிக்கிய 5 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
A plane crashed at the Tribhuvan International Airport in Kathmandu, Nepal. Further details awaited. pic.twitter.com/t686CgVi9w
— ANI (@ANI) July 24, 2024
தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்ற நிலையில் 18 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக நேபாள போலீசார் தெரிவித்துள்ளனர். விமான ஓட்டி 37 வயதான மனிஷ் ஷக்யா மீட்கப்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சவுரியா விமான நிறுவனத்தின் plane 9N-AME (CRJ 200) என்ற விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
#WATCH | Plane crashes at the Tribhuvan International Airport in Nepal's Kathmandu
— ANI (@ANI) July 24, 2024
Details awaited pic.twitter.com/DNXHSvZxCz
விமான விபத்தை தொடர்ந்து திரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விமானம் பறக்க தயாரான போது ஓடுதளத்தில் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான மறு விநாடியே விமானத்தில் தீப் பற்றியதால் நிலைமை மோசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயுடன் கரும்புகையும் விண்ணை முட்டும் அளவுக்கு வெளியேறிய நிலையில், சம்பவ இடமே போர்க்களம் போல் காட்சி அளித்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: போட்டியாளர்களை ஊதித் தள்ளிய கமலா ஹாரீஸ்! அதிபர் வேட்பாளர் ஆவது உறுதி! - Kamala Harris