ETV Bharat / international

நேபாளத்தின் புதிய பிரதமராக சர்மா ஒலி நாளை பதவியேற்பு! - Nepal new Prime Minister

author img

By PTI

Published : Jul 14, 2024, 8:09 PM IST

Nepal New PM: நேபாள நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 12ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசண்டா தோல்வியடைந்ததையடுத்து, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி - ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சித் தலைவர் கே.பி.சர்மா ஒலி நாளை ஆட்சி அமைக்கிறார்.

சர்மா ஓலி
சர்மா ஓலி (Credits - ANI)

காத்மாண்டு: நேபாள நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 12ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் பிரசண்டா தோல்வியடைந்தார். இதையடுத்து தனது தலைமையில் ஆட்சி அமைக்க நேபாள கம்யூனிஸ்ட் கட்சி - ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சித் தலைவர் கே.பி.சர்மா ஒலி அதிபரைச் சந்தித்து உரிமை கோரினார்.

முன்னதாக, நேபாளத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெருபான்மை கிடைக்கவில்லை. இதனால் சிபிஎன் மாவேயிஸ்ட் கட்சி தலைவர் பிரசண்டா 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3 வருடங்கள் ஆட்சி செய்தார்.

இந்நிலையில், சர்மா ஒலி மற்றும் பிரசண்டா இருவருக்கும் இடையே அண்மைக் காலமாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சர்மா ஒலி நேபாளி காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷேர் பகதூர் தேவுபாவுடன் இணைந்து புதிய கூட்டணி அரசு அமைக்கப் போவதாக அறிவித்தார்.

இதையடுத்து, பிரதமர் பதவியை பிரசண்டா ராஜினாமா செய்ய வேண்டும் என இரு தலைவர்களும் வலியுறுத்தினார். ஆனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்குப் பதிலாக நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளப் போவதாக பிரசண்டா அறிவித்தார். அதன்படி, கடந்த ஜூலை 12ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 258 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிராக 194 வாக்குகளும் பதிவாகின.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 138 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பிரசண்டா தோல்வியடைந்தார் என அவைத் தலைவர் தேவ் ராஜ் கிமிரே அறிவித்தார். இதையடுத்து, நேபாளத்தில் மீண்டும் கூட்டணி மாற்றம் ஏற்பட்டு நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சர்மா ஒலி பிரதமாக நாளை (ஜூலை 15) பதவியேற்க உள்ளார்.

இதையும் படிங்க: 46 ஆண்டுகளுக்கு பின் பூரி ரத்ன பந்தர் அறை திறப்பு! தங்கம், வைர ஆபரணங்களை கணக்கெடுக்க திட்டம்! - Puri Jaganath temple ratna Bhandar

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.