ETV Bharat / international

மாலத்தீவு அதிபரின் இந்திய எதிர்ப்பால் பறிபோன உயிர்! வன்மத்தின் உச்சமா? - Mohammed Muizzu denies dornierplane

இந்தியா வழங்கிய டோர்னியர் விமானத்தை பயன்படுத்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அனுமதி மறுத்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க விமானம் கிடைக்காமல் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 11:30 AM IST

Updated : Jan 23, 2024, 8:02 PM IST

டெல்லி : மாலத்தீவுல் உயிருக்கு போராடிய சிறுவனை இந்தியா வழங்கிய விமானத்தில் அழைத்துச் செல்ல அந்நாட்டு அதிபர் மறுத்த நிலையில், போதிய நேரத்திற்குள் சிகிச்சை கிடைக்காததால் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாலத்தீவில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றார். அதிபரக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது முதலே இந்தியாவுக்கு எதிரான காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். சீன ஆதரவாளரான முகமது முய்சு, இந்தியாவுக்கு முதலிடம் என்ற கொள்கை நிராகரிப்பு உள்ளிட்ட கொள்கைகளை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறார்.

முன்னதாக தீவு நாடான மாலத்தீவுக்கு மனிதாபிமான மற்றும் அவசர மருத்துவ சேவைகளை மேற்கொள்ள டோர்னியர் வகை விமானத்தை இந்தியா வழங்கியது. இந்த விமானத்தின் மூலம் தீவு நாடுக்குள் சிக்கிக் கொண்டு மருத்துவ உதவிகளை பெற முடியாதவர்களை அங்கிருந்து அழைத்து வந்து மருத்துவமனை அனுமதிப்பது உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த விமானம் இந்துஸ்தான் எரோநாட்டிகல் லிமிடட் நிறுவனத்தில் செய்யப்பட்டவை. இந்நிலையில், இந்தியா வழங்கிய டோர்னியர் விமானத்தை பயன்படுத்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வில்மிங்டன் அடுத்த காஃப் அலிஃப் வில்லிங்கிலி பகுதியைச் சேர்ந்த சிறுவனுக்கு மூளையில் உள்ள கட்டிக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டு உள்ளது.

இதையடுத்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவசர விமான ஊர்த்தியை கோரி உள்ளனர். இருப்பினும் இந்தியா வழங்கிய டோர்னியர் விமானத்தில் சிறுவனை அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்க அந்நாட்டு அதிபர் முகமது முய்சு அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

ஏறத்தாழ 16 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறுவன் உயிரிழப்புக்கு அரசின் அஜாக்கிரதை மற்றும் வீண் விதண்டாவாதமே காரணம் எனக் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான வெறுப்பு அரசியலில் ஈடுபட்டு உள்ள முகமது முய்சுவால், சிறுவன் உயிரிழந்ததாக எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசுக்கு எதிராக போர்க் கொடி தூக்கி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இயற்கையாகவே சீனா ஆதரவு எண்ணம் கொண்ட முகமது முய்சு அண்மையில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று சீனா சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அதேநேரம் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான பல்வேறு கருத்துகளை மறைமுகமாக தெரிவித்து வந்தார். அதேபோல், மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டு உள்ள இந்திய ராணுவ வீரர்களை மார்ச் 15ஆம் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும் என்றும் கெடு விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அரிச்சல்முனையில் பிரதமர் மோடி! கோதண்ட ராமர் கோயிலில் சாமி தரிசனம்!

Last Updated : Jan 23, 2024, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.