வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரீஸ் செய்தியாளர்கள் சந்திபில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவுடன் தனது கலந்துரையாட போது அந்நாட்டுக்கான தனது ஆதரவு எப்போதும் இருக்கும் எனத் தெரிவித்ததாக கூறினார்.
இருப்பினும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் போர் நிறுத்தத்திற்கான பணிகளில் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருவதாகவும் கூறினார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கலந்துரையாடி போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்ய வேண்டியது அறிவுறுத்துவதாக கூறினார்.
காசாவில் மக்கள் படும் துயரங்களை கண்டு அமைதியாக இருக்க மாட்டோம் என்றும், விரைவில் இரு தரப்பு சுமூக பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இஸ்ரேல் பாதுகாப்பாக இருக்கும், பணயக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர் என்றார்.
காசாவில் பாலஸ்தீனியர்களின் துன்பங்கள் முடிவுக்கு வந்து, பாலஸ்தீன மக்கள் தங்கள் சுதந்திரம், கண்ணியம் மற்றும் சுய உரிமையைப் பயன்படுத்தக் கூடிய வகையில் இந்தப் போர் முடிவடையும் நேரம் நெருங்கிவிட்டதாக கமலா ஹாரீஸ் தெரிவித்தார்.
காசாவில் சிக்கிக் கொண்டு உள்ள அமெரிக்க பணையக் கைதிகளை மீட்டு சொந்த நாட்டு திரும்ப தேவையான நடவடிக்கைகளில் அதிபர் பைடன் தலைமையிலான அரசு தொடர் கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார். இஸ்ரேலுக்கு தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு, அது எப்படி முக்கியமானதோ அதேபோல், காசாவுக்கும் அது பொருந்தும் என்றார்.
கடந்த ஒன்பது மாதங்களில் காசாவில் நடந்தது பேரழிவு என்றும் இறந்த குழந்தைகள் மற்றும் பசியால் வாடிய மக்கள், போரால் இரண்டு மூன்ற்று இடங்களில் இடம் பெயர்ந்து சென்றவர்களின் புகைபடங்கள் வெளியாகி கண்ணீரை வரச் செய்ததாக கூறினார். இந்த துயரங்களை பார்த்துக் கொள்ள முடியாது என்றும் துன்பங்களை கண்டு உணர்ச்சியற்றவர்களாக மாற அனுமதிக்க முடியாது என்றும் கமலா ஹாரீஸ் தெரிவித்தார்.
தீவிரவாதத்தையும் வன்முறையையும் அனைவரும் கண்டிப்போம் என்றும் அப்பாவி பொது மக்களின் துன்பத்தைத் தடுக்க நம்மால் முடிந்ததைச் செய்வோம் என்றார், மேலும் மதவெறி, இஸ்லாமிய வெறுப்பு உள்ளிட்ட எந்த வகையான வெறுப்பையும் கண்டித்து நமது நாட்டை ஒன்றிணைக்க பாடுபடுவோம் என்று கமலா ஹாரீஸ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இலங்கை அதிபர் தேர்தல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு! - Sri Lanka President Election