ETV Bharat / international

ஹமாஸ் தளபதி முகமது டெய்ஃப் படுகொலை.. இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு! - mohammed deif hamas - MOHAMMED DEIF HAMAS

Hamas Military Chief Mohammed Deif Killed: ஹமாஸ் ராணுவப் படை தளபதியான முகமது டெய்ஃப் கான் யூனிஸில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

முகமது டெய்ஃப் கொல்லப்பட்டதாக அறிவிப்பு
முகமது டெய்ஃப் கொல்லப்பட்டதாக அறிவிப்பு (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 5:04 PM IST

எருசலேம்: இஸ்ரேலுக்கு எதிராக பல ஆன்டுகளாக பல்வேறு தாக்குதல்களை நடத்திய ஹமாஸ் ராணுவத்தின் தளபதி முகமது டெய்ஃப், கான் யூனிஸில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் இன்று அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முகமது டெய்ஃப் உடைய மரணத்தையும் இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.

இஸ்ரேல் மீது கடந்தாண்டு அக்டோபரில் ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ராணுவத்தினர் 251 பேர் காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 39 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த போரின்போது ஹமாஸ் அமைப்பின் தளபதியாக செயல்பட்ட முகமது டெய்ஃப், தமது ராணுவப் படைகளுக்கு கட்டளை இட்டதாகவும், ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவிக்கிறது.

கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக இஸ்ரேலின் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவராகவும், 2015ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலிலும் இருந்து வந்த முகமது டெய்ஃப், காசாவின் தெற்குப் பகுதியான கான் யூனிஸில் கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக உளவுத்துறையின் அறிக்கையை தொடர்ந்து இன்று உறுதி செய்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம் கடந்த ஜூலை 13ஆம் தேதி காசாவின் கான் யூனிஸில் உள்ள முகமது டெய்ஃப் வசித்து வரும் பகுதியில் தாக்குதல் நடத்தியது. அதில் கிட்டத்தட்ட 90 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்த ஹமாஸ், அந்த தாக்குதலில் முகமது டெய்ஃப் இல்லை என மறுத்துவிட்டது. இதுகுறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வந்த நிலையில், ஹமாஸ் தளபதி முகமது டெய்ஃப் அந்த தாக்குதலில் இறந்துவிட்டார் என்று இஸ்ரேல் ராணுவம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஈரான்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை; இஸ்ரேலுக்கு ரஷ்யா கடும் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.