துபாய்: ஈரான் கடந்த ஒன்றாம் தேதி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இப்போது அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 1200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைய கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக காசா பகுதியில் உள்ள ஹமாஸ் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. ஈரானின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்றிருந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேஹ் கடந்த ஜூலை 31ஆம் தேதி டெஹ்ரான் நகரில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஈரான் பகிரங்கமாக குற்றம் சாட்டியது.
இதனால், இஸ்ரேல் மீது ஈரான் கடந்த ஒன்றாம் தேதி தாக்குதல் நடத்தியது. எனவே எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் கூறி வந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் ஈரான் மீது ஏகவுகனை தாக்குதலில் ஈடுபட்டது.
“I can now confirm that we have concluded the Israeli response to Iran’s attacks against Israel. We conducted targeted and precise strikes on military targets in Iran — thwarting immediate threats to the State of Israel.”
— Israel Defense Forces (@IDF) October 26, 2024
Watch IDF Spokesperson RAdm. Daniel Hagari talk about the… pic.twitter.com/1OOss3etpV
தெஹ்ரான் நகரில் வசிக்கும் மக்களில் ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஏழு குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது,"என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் சிரியாவின் அரசு செய்தி நிறுவனமான சானா வெளியிட்டுள்ள செய்தியில் சிரியாவின் கோலான் பகுதியில் இருந்து ஈரானை நோக்கி ஏவப்பட்ட ஏவுகனைகள் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கின,"என்று கூறியுள்ளது.
இதையும் படிங்க: இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்:"எந்த ஒரு அணுகுமுறையும் நேர்மையானதாக இருக்க வேண்டும்"-இந்தியா வலியுறுத்தல்
இந்த தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவம், "துல்லியமாக ஈரான் ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது,"என்று கூறியுள்ளது. இதையடுத்து ஈரானில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டன. இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஈரானின் ராணுவ செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹாகாரி,"இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் ஈரான் மற்றும் அதன் நெருங்கிய கூட்டாளிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஈரான் மண்ணில் இருந்து நேரடி தாகுதலும் நடந்துள்ளது. உலகில் எந்த ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இருந்தாலும் பதிலடி கொடுப்பதற்கு உரிமை கொண்டது போல இஸ்ரேலும் பதிலடி கொடுத்துள்ளது,"என்றார்.
இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்த வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் சீன் சாவெட்,"ஈரானின் ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலை நாங்கள் அறிந்திருக்கின்றோம்,"என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்