ETV Bharat / international

காசாவில் இஸ்ரேலுக்கு பின்னடைவு.. ஹமாஸ் தாக்குதலில் 21 வீரர்கள் உயிரிழப்பு! - இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஹமாஸ் கிளர்ச்சிக் குழு வீசிய டாங்கி எதிர்ப்பு ஏவுகணை தாக்கியதில் இஸ்ரேல் ராணுவத்தின் 21 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ANI

Published : Jan 23, 2024, 4:20 PM IST

Updated : Jan 23, 2024, 8:14 PM IST

டெல் அவிவ் : ஹாமாஸ் படை நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தின் 21 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் ஆயுதக் குழுக்கள் நடத்திய கோரத்தாக்குதலை அடுத்து, காசா மீதான பதில் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. ஏறத்தாழ 6 மாதமாக இர தரப்பிலும் கடுமையான போர் நடந்து வரும் நிலையில் லட்சக்கணக்கான மக்கள் இந்த போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், காசா பகுதியில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தின் 21 வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. டாங்கி எதிர்ப்பு ஏவுகணையை ஹாமாஸ் கிளர்சிக் குழு வீசியதில், அது இரண்டு கட்டடங்கள் மீது மோதி சரிந்து விழுந்ததாகவும் இந்த விபத்தில் கட்டத்தின் அருகில் இருந்த 21 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் எல்லையில் இருந்து 600 மீட்டர் எல்லையில் உள்ள இடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது. ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேல் வீரர்கள் 21 பேருக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவம் ஹமாஸ் படைகள் மீது துரித தாக்குதல் நடத்துமாறு பிரதமர் நெதன்யாஹு உத்தரவிட்டு உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க : மியான்மர் ராணுவ விமானம் மிசோரத்தில் விபத்து: பயணித்தவர்களின் கதி என்ன?

Last Updated : Jan 23, 2024, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.