சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வசித்து வந்த எம்.கிருஷ்ணா என்பவர், மல்லிகா பேகம் ரஹமான்சா அப்துல் ரஹ்மான் (40) என்ற தனது மனைவியை, ஜனவரி 17, 2019 அன்று அடித்து சித்ரவதை செய்துள்ளார். இவர் மீது ஏற்கனவே, இது தொடர்பான மற்றொரு வழக்கு இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது. அப்போது, பெண் தோழி உட்பட மனைவியையும் கடுமையாக தாக்கியதை நீதிமன்றத்தில் கிருஷ்ணன் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவ்வழக்கின் விசாரணையில், இவர் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதும், அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியை அடித்து துன்பறுத்துவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார் என்பது தெரியவந்துள்ளது. 'குற்றம் சாட்டப்பட்டவர், தான் காட்டும் கோபத்தின் தாக்குதல் வெளிப்பாடால், அவர் எளிதில் பாதிப்படுவார் என்பதை அறிந்திருந்தார்' என நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து, கவுன்சிலிங் மூலம் அவரிடம் செய்த மருத்துவ ஆய்வில், அவர் தொடர்ச்சியான மது குடிக்கும் பழக்கத்தால் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருந்ததால் இந்த செயலில் ஈடுபட்டதாகவும், பல முறை அப்பெண்ணுக்கு எதிராக தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் கூறிய நீதிமன்றம், அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாக உத்தரவிட்டது.
முன்னதாக, 2015-ல் கிருஷ்ணாவின் மனைவியும், அவரது பெண் தோழியும் வீட்டின் ஒரு அறைக்குள் மதுக்குடித்துக் கொண்டு இருந்ததாகவும், இதைக் கண்டு கிருஷ்ணா அதிர்ச்சியடைந்து இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, மதுபாட்டிலால் முகம் உள்ளிட்டவைகளில் கடுமையாக தாக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர், தனிப்படை போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
இதன் பின்னர், நீதிமன்றத்தின் தரவுகளின் படி, அர்ப்பமான விஷயங்களுக்குக் கூட கிருஷ்ணன் மல்லிகாவைத் தாக்கிய போதும், இருவரும் 2017 வரை ஒன்றாக வாழ்ந்துள்ளனர். மேற்படி, இது தொடர்பாக பிரபல நாளிதழ் வெளியிட்ட தகவலின் படி, 2019-ல் வழக்கு ஒன்றில் கிருஷ்ணா சிறையில் இருந்தபோது, பிற ஆண்களுடன் உறவில் இருந்ததாக, கிருஷ்ணனிடம் அவரது மனைவி மல்லிகா கூறியதாக தெரியவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் மதுபோதையில், மனைவி மல்லிகாவை தலை உள்ளிட்ட உடலின் பல பாகங்களில் கடுமையாக தாக்கியதாக தெரியவருகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட மல்லிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, மீண்டும் நாள் முழுவதும் மது அருந்திய கிருஷ்ணன், நடந்தவை குறித்து மல்லிகாவின் சகோதரியிடம் கூறியதாக தெரியவருகிறது. இதையடுத்து மன விரக்தியில் மீண்டும் ஆத்திரமடைந்து வீடு திரும்பிய மல்லிகாவை, மீண்டும் பயங்கரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது, மல்லிகா தனது முகம், கழுத்து, தலை காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பேசிய துணை அரசு வழக்கறிஞர் திமோதியஸ் கோ, சம்பவத்தன்று கிருஷ்ணன் போலீசாரிடம் சரணடைந்ததாகவும் கூறினார். இதையடுத்து கைது செய்யப்பட்ட கிருஷ்ணன் மன விரக்தி மற்றும் கோபத்தினாலும் குற்றத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இருப்பினும், அவர் தனது மனைவி மீது நடத்திய தாக்குதல், "மது போதையால் ஏற்பட்டிருக்கலாம். இதுபோன்ற செயல்கள் சீரழிவைத் தருபவை" என்று நீதிமன்றம் ஆவணங்கள் மூலம் சுட்டிக்காட்டியது.
அப்போது, அவர் 2018-ல் காவல்துறையினரை அவமதித்த விவகாரம், 2015 - 2016 ஆண்டுகளில் ஏற்பட்ட அவரது குடும்பத் தகராறு உள்ளிட்டகளைக் கொண்டு அவருக்கு கவுன்சிலிங் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரியவருகிறது. இக்குற்றத்திற்குப் பிறகு கிருஷ்ணனின் மனநலக் கோளாறு கண்டறியப்பட்டாலும், போதையில் வன்முறையை உள்ளடக்கிய "சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை" அவருக்கு இருப்பதாக கோ கூறினார்.
பிற ஆண்களுடனான தனது உறவை ஒப்புக்கொண்டவரின் வாக்குமூலம், தற்போது குற்றம்சாட்டப்பட்டவரின் உணர்ச்சிகளை குறைத்து மதிப்பீட இயலாது எனவும் துரோகம் செய்ததாக கூறப்படும் இறந்தவரை தண்டிக்கவும் இயலாது எனவும் கூறிய நீதிமன்றம் கிருஷ்ணாவிற்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: பாங்காக் பயணியின் பையில் 10 அனகோண்டா - மிரண்டு போன சுங்கத் துறை! என்ன நடந்தது? - Bengaluru Airport Anacondas Seized