பிராம்டன்: கனடாவின் டொரான்டோ நகரில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளி தம்பதி மற்றும் மகள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்திய வம்சாவளியான ராஜீவ் வரிகோ (வயது 51), ஷில்பா கொத்தா (வயது 47) தம்பதி தங்களது 16 வயது மகள் மஹக் வரிகோவுடன் ட்ரோன்டோ, பிராம்டன் பகுதியில் வசித்து வந்தனர்.
கடந்த மார்ச் 7ஆம் தேதி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உடல் கருகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மூவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், அடையாளம் கண்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இதில் ராஜீவ் வரிகோ காஷ்மீரை சேர்ந்த பண்டிட் என அடையாளம் காணப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆன்டாரியோ சுகாதாரத்துறையில் பணியாற்றி வந்த ராஜீவ் வரிகோ தீவிபத்தில் குடும்பத்துடன் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் அது குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த மாதம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் இந்திய வம்சாவளி குடும்பம் ஒன்று உயிரிழந்தது குறிப்பிடத்தகக்து.
இந்திய வம்சாவளியான ஆனந்த் சுஜித் ஹென்ரி, அவரது மனைவி அலீஸ் பிரியங்கா, மற்றும் இரடை குழந்தைகள் நோவா மற்றும் நெய்தன் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : டெல்லி மதுபான கொள்கை வழக்கு: அரவிந்த் ஜெரிவாலுக்கு ஜாமீன்!