ETV Bharat / international

மீண்டும் கனடா பாப்ஸ் கோயில் சேதம்.. சட்டத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்! - BAPS Swaminarayan Mandir vandalised - BAPS SWAMINARAYAN MANDIR VANDALISED

Hindu temple vandalised in Canada: கனடா நாட்டில் பல்வேறு பகுதிகளில் இந்து கோயில்கள் உள்ளிட்ட இடங்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், எட்மண்டன் பகுதியில் உள்ள பாப்ஸ் அமைப்பின் சுவாமி நாராயணன் கோயில் சேதப்படுத்தப்பட்டதற்கு அந்நாட்டு எம்பி அர்யா வருத்தம் தெரிவித்துள்ளார்.

Khalistan supporters stage a protest
Khalistan supporters stage a protest (ANI Photo)
author img

By PTI

Published : Jul 23, 2024, 9:56 PM IST

எட்மண்டன் (கனடா): கனடாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் இந்து சமுக மக்களுக்கு தொடர்புடைய பகுதிகள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எட்மண்டன் பகுதியில் உள்ள பாப்ஸ் சுவாமி நாராயணன் கோயில் (BAPS Swaminarayan Mandir) சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்திற்கு நேப்பியன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரா ஆர்யா நாடு முழுவதும் வசிக்கும் இந்து சமுக மக்கள் மீது வெறுப்பு பரப்பப்பட்டு வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “எட்மண்டன் பகுதியில் உள்ள பாப்ஸ் சுவாமி நாராயண் கோயில் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கனடாவின் டொராண்டோ, பிரிட்டிஷ் கொலம்பியா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்து கோயில் வெறுக்கத்தக்க கிராஃபிட்டிகளைக் (graffiti) கொண்டு சேதப்படுத்தப்படுகிறது.

மேலும், நீதிக்கான சீக்கியர்களைச் சேர்ந்த குர்பத்வந்த் சிங் பன்னூன் இந்துக்கள் இந்தியாவுக்கு திரும்பிச் செல்லுமாறு கடந்த ஆண்டு பகிரங்கமாக அறிவித்தார். அதேபோல், காலிஸ்தான் ஆதரவாளர்கள் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை பகிரங்கமாக கொண்டாடினர்.

நான் எப்பொழுதும் சொல்வது போல், காலிஸ்தான் பயங்கரவாதிகள் வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டும் வார்த்தைகளை எளிதில் பொது வெளியில் பயன்படுத்துகின்றனர். ஆனால், கனடா-இந்துக்கள் சட்டத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் என்பதை நான் மீண்டும் பதிவு செய்கிறேன்.

ஒரு உடைந்த ரெக்கார்டை போல் நான் இதனை மீண்டும் மீண்டும் கூறுகிறேன். இது கனடாவில் வாழும் இந்துக்கள் மீதான வன்முறையாக மாறுவதற்கு முன்பு, கனடிய சட்ட அமலாக்க முகமைகள், இந்தப் பிரச்னையை தீவிரமாக கருதி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டு இருந்தார்.

கனடாவில் இந்து கோயில் சேதப்படுத்தப்பட்டதற்கு அந்நாட்டின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் டெர்ரி டுகுயிட் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது 'X' வலைத்தளப் பக்கத்தில், "ஒரு வழிபாட்டுத் தலத்தை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொள்வது, கனடா நாட்டின் மதிப்புகளுக்கு எதிரான ஒரு வெறுப்பூட்டும் செயல். இந்த செயல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என குறிப்பிட்டு இருந்தார்.

இதனிடையே, கனடா நாட்டு சட்ட அமலாக்கத்துறை இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு, கனடாவில் உள்ள அனைத்து சமூக மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்துகின்றனர். மேலும், பல உலகளாவிய அமைப்புகளும் கனடாவில் செயல்படும் காலிஸ்தான் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: நடுரோட்டில் இந்திய வம்சாவளி நபர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.