ETV Bharat / international

"கடவுள் என்னை காப்பாற்றினார்.." துப்பாக்கிச் சூடுக்கு பின் டிரம்ப் முதல் முறை தேர்தல் பிரசாரம்! - US president Election Donald Trump - US PRESIDENT ELECTION DONALD TRUMP

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கடவுள் தன்னை காப்பாற்றியதாக முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Republican presidential candidate former President Donald Trump at RNC (AP Photo)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 19, 2024, 11:31 AM IST

விஸ்கான்சின்: நடப்பாண்டின் நவம்பர் மாதம் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில், கடந்த வாரம் பென்சிலிவேனியாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காது பக்கத்தில் காயம் ஏற்பட்டு டிரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயது மேத்யூ க்ரூக்ஸ் என்ற இளைஞரை துப்பாக்கிச் சூடு நடத்தி பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அதன்பின் விஸ்கான்சின் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்ட நிகழ்வில் டிரம்ப் கலந்து கொண்டார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பின் முதல் முறையாக பொது மேடையில் டிரம்பை கண்டது கூட்டத்தில் குழுமியிருந்த மக்கள் டிரம்ப், அமெரிக்கா என கத்தி கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்காவின் பாதி பகுதியில் வெற்றி கிடைக்காததால், கடந்த முறை தோல்வியுற்றேன் என்றும் இந்த முறை முழு அமெரிக்காவிற்கும் அதிபராக தான் போட்டியிடுவதாகவும் கூறினார்.

இன்னும் 4 மாதங்களில் நம்ப முடியாத வெற்றியைப் பெறுவோம் என்றும் அனைத்து மதங்கள், மக்கள் மற்றும் சமயத்தினருக்கு அமைதி மற்றும் செழிப்புக்கான புதிய சகாப்தத்தை தொடங்குவோம் என்றும் கூறினார். தான் அமெரிக்கா முழுவதற்கும் அதிபராக இருப்பேன் என்றும் அமெரிக்காவின் பாதிக்கு அல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்காக பணியாற்றுவேன் என்றார்.

கடந்த சனிக்கிழமை தனது பேரணியில் நடந்த படுகொலை முயற்சி குறித்து கூறிய டிரம்ப், அதில் இருந்து மீண்டு வர தொடர்ந்து மக்களின் அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தியதற்காக அமெரிக்க மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகம் கூறினார். கொலையாளியின் தோட்டா தனது உயிரை பறிக்க வேண்டியதாகவும் கடவுள் தன்னை காப்பாற்றியதாகவும் டிரம்ப் கூறினார்.

சரியான நேரத்தில் தான் தலையைத் திருப்பியது எனது அதிர்ஷ்டம் என்றும் கடைசி நொடியில் தலையை அசைக்காமல் இருந்திருந்தால், அந்த தோட்டா என்னைத் தாக்கி இருக்கும், இப்போது என்னால் உங்கள் முன்பு நின்றிருக்க முடியாது என்றும் அவர் கூறினார். அந்த நிகழ்வை பற்றி ஒரு முறை மேல் தன்னால் சொல்ல முடியாது என்றும் அது மிகவும் வேதனையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்த பின் கடவுள் தன் பக்கத்தில் இருப்பதாக பாதுகாப்பாக உணர்ந்ததாக கூறினார். அதிபர் தேர்தல் பிரசாரங்களில் தொடர்ந்து கலந்து கொள்ள உள்ளதாகவும் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார். அரசியல் துன்புறுத்தலுக்கு நீதியை ஆயுதமாக பயன்படுத்துவதை ஜனநாயகக் கட்சி மேற்கொண்டு வருவதாகவும் அதை உடனடியாக நிறுத்த வேண்டும், நம் நாட்டு மக்களுக்காக ஜனநாயகத்தை காப்பாற்றுவேன் என்றும் டிரம்ப் கூறினார்.

இதையும் படிங்க: மத்திய பிரதேசத்தில் பாஜக தலைவர் மீது துப்பாக்கிச் சூடு! என்ன நடந்தது? - Madhya Pradesh BJP Leader shot

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.