பாரீஸ்: கடந்த திங்கட்கிழமை பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மசோதாவை தாக்கல் செய்த நிலையில், மசோதா மீது பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் 780 ஆதரவு வாக்குகளும் 72 எதிர்ப்பு வாக்குகளும் பதிவான நிலையில், மசோதான ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் உலகிலேயே கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக்கி அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வண்ட முதல் நாடு என்ற சிறப்பை பிரான்ஸ் பெற்றது.
கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் கருக்கலைப்பு என்பது சட்டப்பூர்வமானதாக இருந்து வந்தாாலும், தற்போதைய அரசியலமைப்பு திருத்தம் முழு சட்டப்பூர்வாங்க நடவடிக்கையாக மாற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கருவுற்ற பெண்கள் 14வது வாரம் வரை கருக்கலைப்பு செய்யலாம் என்பது பிரான்சில் சட்டப்பூர்வமானது. இந்த சட்ட திருத்தம் அதில் எதையும் மாற்றம் ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரான்சில் முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்கள் நிறைவேற்றப்படும் போது பாரம்பரிய முறைப்படி சீலிங் செரிமனி என்ற விழா நடத்தப்படுவது வழக்கம்ம். அந்த வகையில் புதிய சட்ட மசோதா நிறைவேற்றத்தை குறிக்கும் விதமாக வரும் மகளிர் தினத்தன்று சீலிங் செரிமனி நடைபெறும் என அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இந்திய நடன கலைஞர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை! தொடரும் இந்தியர்களுக்கு எதிரான வன்முறை? என்ன காரணம்?